தமிழும் சிவமும்
கலயம் அடுக்குப் பானையிலும் அடுப்பின் மேலும்
இருக்கும்: கலசம் கோவிலிலும் கோபுரத்தின் மேலும் அமரும்.
கலயம்' என்றால் ஏழையும் கஞ்சியும் மனத்தில்
தோன்றும். 'கலசம் என்றால், அடியாரும் இறையன்பும் எழும். "கலயம் எளியதாகவும் சற்றுத் தாழ்வானதாகவும் கருதப்படும்.
கலசம்' அரியதாகவும் மிக உயர்வானதாகவும் மதிக்கப் படும்.
கலயம் தூசி படிந்த கரிப்பானை, 'கலசம் தூய்மை துலங்கும் தெய்வச் சின்னம். 'செம்பை விற்றுக் கலயம் வாங்கியது போல்” -என்னும் பழமொழி கலயத்தின் சிறுமையைப் பேசுகின்றது.
ஆலயந் தானும் அரனெனத் தொழுமே - என்று சிவஞானபோதம் கலசத்தின் பெருமையைக் குறிப்பாகப் பாடு கின்றது.
இவ்வாறு கலயமும் கலசமும் தன்மைகளால் மாறுபட்டிருக் கலாம்; உருவத் தோற்றத்தால் வேறுபட்டிருக்கலாம். ஆனால், செய்பொருள் அளவில் மாறுபாடு இல்லை. கலயத்தைக் , கவிழ்த் துவைத்து அதன்மேல் கலைப்பாங்குடன் ஒரு கூம்பு அமைக்கப்பட்டதுதான் கலசம். இன்றும் பல சிறிய கோவில் களில் இவ்வாறே கலயம் கவிழ்த்து வைக்கப்பட்டுச் செய்யப் பட்டிருப்பதைக் காணலாம். செம்பிலும் பொன்னிலும் இது வளர்ந்தது. எவ்வாறாகிலும் இரண்டும் கலமே.
, சிவ.போ : 1.2 : 4