பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 35

நிகழ்ச்சிகளில் தமிழறிஞர் இக்கோட்பாட்டைத் தவறாது கடைப்பிடிக்கவேண்டும். திருக்கோவிலாரும் இதற்கு வாய்ப் பளித்து மொழிவழி நலம் சேர்க்கும் உணர்வுடையோர்தம் கருத்துகளைப் பரப்புவதற்கு உதவ வேண்டும். இறைவன் திரு முன்னேனும் குறுக்குவழிப்பேச்சுகள் தவிர்க்கப் படவேண்டும். இது முனைப்பாக்கிக் கொள்ளவேண்டியதாகியுள்ளது. இது இன்று இன்றியமையாததாகியுள்ளது. - -

ஒரு கவிதையும், ஒர் உரைமொழியும் இங்கு இந்நேரத்திற்கு

நிறைவுரையாகும்: 'கட்டி

இரும்புதந்த நெஞ்சுடையார்

துறைதோறும் நின்னெழிலை ஈடழித்து வரும்புதுமை நினைக்கையிலே

நெஞ்சுபதைக் கும்சொல்ல வாய்ப தைக்கும்' பாவேந்தர் பாரதிதாசனார்.

'தமிழ்மொழியிலோ யார் என்ன செய்தபோதிலும் கேள்வி முறையில்லை. அவரவர் தந்தமக்குத் தோன்றியவாறும் வாய்க்கு வந்தன வந்தவாறும் எழுதுகின்றனர். இவ்வாறு செல்ல விடு

தலும் கேடே’’’’

-பரிதிமாற்கலைஞர்

1 : தமிழிபக்கம் , 19 20. தமிழ்மொழி வரலாறு: பக் 1 19.