பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு 53

கணக்காயர் தாம் கற்றவற்றை எல்லாம் மனப்பாடம் ஆக்கிக் கொண்டவர். ஏட்டில் எழுதிய பாடச்சுவடியைக் கையில் கொள்வார். நெஞ்சில் எழுதிய நினைவுச் சுவடியையே வாயில்கொள்வர். நினைவே அவர்க்குப் பாடநூல் "ஆசிரியரே பாடப்புத்தகம்' என அண்ணல் காந்தியடிகள ர் ஒரு முறை குறித்தமை இக்கணக்காயர்க்கு மிகப் பொருந்துவதாகும்.

பாடம் என்பதற்கு மூலச் செய்யுள் என்பது அக்காலப் பொருள். பாடமே ஓதிப் பயன்தெரிதல் தேற்றாத, முடர்' என்னும் நாலடிப் பாட்டிலும்' இப்பொருள் நிற்கின்றது. கருத்தைக் கொள்ளாமல் மூல பாடத்தை மட்டும் மனப்பாடம் செய்த முடரைச் சாடும் அந்நாலடியார்,

  • கற்றது. உ மின்றிக் கணக்காயர் பாடத்தால் பெற்றதாம் பேதையார் சூத்திரம்

என்று கூறி கணக்காயர் மூல பாடத்தை உணர்த்தியதை அறி விக்கின்றது.

கணக்காயன்' என்னும் சொல்லினது பொருள் வளர்ச்சி கணக்கு-ஆயன்-நூல்களை ஆராய்ந்தவன் என்னும் பொருளுக்கு வந்தது. பெரும்புலவர் நக்கீரனாரது தந்தையார் மதுரைக் கணக்காயர்’ எனப்பட்டவர். இவர் மதுரையில் ஈடு இணை யற்ற நூல் கற்பிப்பாராக கணக்காயராக இருந்து ‘மதுரைக் கணக்காயர்' என்றாலே இவரைச் சுட்டுவதாகி அச்சிறப்புச் சுட்டாம் கணக்காயரே இவரது இயற்பெயர் போல் வழங்கப் பட்டது எனலாம்.

இவர் போன்றவரே கூரைக் கணக்காயர் என்பவர், கணக்கா யனார் தத்தனார் என்றொரு புலவர் விளங்கினார். இவர் கணக்காயனார் என்பதை அடைமொழியாகப் பெற்றவர். இவர் களது பெரும்புலமையை எண்ணுங்கால் கணக்காயர், நூல்களை ஆராய்ந்த பெரும் ஆசிரியர்களாக விளங்கியிருக்கலாம் என உணர்கின்றோம்.

18. நாலடி : 316 : 1.2

1 9. *テ : 3 l 4 + 1 , 2