பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு 67

குது வட்டு ஆடும் களத்தை

அரங்கமாக, 'அரங்கின்றி வட்டு ஆடியற்றே"

என்று திருக்குறளும், 'கட்டளை அன்ன வட்டு '

அரங்கு அமைத்துக் கல்லாச் சிறுவர்

நெல்லிவட்டு ஆடும்'

- என்று நற்றினையும், 'அரங்கினுள் வட்டுக்

காரையிருந்தார்க் கெளிய போர்' - என்று பழமொழி நானூறும் பகர்கின்றன. நம்மாழ்வார்

அரங்கின் மல்லரைக் கொன்று' - என்று பாடி மற்போர்க் களத்தை அரங்கு' எனக் காட்டு, கின்றார். ஆற்றின் நடுவே மணல்மேடு இடப்பட்ட மேடைத் திட்டு ஆற்றிடைக்குறை ஆகும்.

'அரங்கமும், ஆற்றிடைக்குறையென அறைவர்’ என்பதே சேந்தன் திவாகரம், காவிரியின் இடையே மேடிட்டத் திட்டு 'திருவரங்கம்' என்னும் ஊராகியது. சிலப்பதிகாரம் இதனை 'ஆற்றல் அரங்கம்" என்கின்றது" இவற்றால் மேடான திட்டையும் அரங்கமாகக் காண்கின்றோம்.

இவை மட்டும் அன்றி, அடுப்புப் புடை என வழங்கப்படும் அடுப்பு மேடையும் அரங்கம் என்பதை,

'தீயில் அடுப்பின் அரங்கம் போல'

8. குறள் - 40 : 9 . நற் : 3, 3, 4 10. ւց - 177-3,4 11. நாலா. தி. பிர- 2387 - 2 18. சேற். திவா - இடம் - 50 : 2 13. சிலம்பு - 10 - 156 14. அகம் - 137 - 11