பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனப் பதிற்றுப்பத்தின் பழைய உரையாசிரியர் காணும் தண் மைக்கு இளமூங்கில் என்ற பொருளே மிகவும் பொருந்துகின்றது. இவ்வாறு சங்க இலக்கியத் தமிழ்ச் சொற்ருெடர்க்குப் புதுப் பொருள் காண்கின்றது மலேயாளப் புலமை. தொல்காப்பிய நூற்பா ஒன்றின் பொருளேக் காண்பதில் ஏற்படும் இடர்ப்பாடுகளே மலேயாள இலக்கணக் கருத்துக்கள் அகற்றுகின்றன என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டை இங்கு காண்போம். “ ஈற்று நின்றிசைக்கும் ஏயென் இறுதி கூற்று வயின் ஒரளபு ஆகலும் உரித்தே' " என்ற தொல்காப்பிய நூற்பாவிற்குச் செய்யுளின் இறுதியில் நிற்கும் ஈற்றடை ஏகாரம் ஒரு மாத்திரையுாய் நிற்கும்” என்று இளம்பூரணர், தெய்வச் சிலையார், சேவைரையர் ஆகிய மூன்று உரையாசிரியர்களும் பொருள் கொள்கின்றனர். என்ருலும் வரிவடிவமாக கடல் போற் ருேன்றல காடிறந் தோரே " என்ற அகநானூற்றடியைச் சான்று காட்டுகின்றனர். எனவே ஒலி வடிவத்தில் மட்டும்தான் இம்மாற்றம் என்பது கருத்து. வரிவடிவத்திலெனில் எ என வருமுயிர் மெய்யிருகாது' என்னும் விதிக்கு முரணுகும். நச்சிஞர்க்கினியரோ ஈற்றசை ஏகாரம் தனக்கு உரிய இரண்டு மாத்திரையே அன்றிப் பின்னரும் ஒரு மாத்திரை உண்டாய் வருதலும் உரித்து” என உரை எழுதிக் கடல் போற் ருேன்றல காடிறந் தோரேள என்று சான்றையும் காட்டுகின் ருர், இது வலிந்து கொள்ளப் பட்ட ஒன்று என்பதை ஏனைய உரையாசிரியர் கொள்ளும் பாடத் தால் தெளியலாம். 206

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/214&oldid=743340" இலிருந்து மீள்விக்கப்பட்டது