பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முழுமையான சமுதாயத்தை நோக்கி அமைக்கும் கலித்தொகைப் புலவர்கள் எளிமை கருதி, இயல்பு கருதி, உண்மை நிலைமை கருதி, அன்றைக்கே இலக்கியத்தில் பேச்சு மொழி”க்கு இடந் தந்து விட்டனர். ‘' எல்லா! இஃதொத்தன், என் பெருன் கேட்டைக்கான் ” - கலித்தொகை 61 (ஒருவன் > ஒருத்தன் > ஒத்தன்) “ஏஏ இஃதொத்தன் நாணிலன்! ஏஏ! எல்லா! மொழிவது கண் டை? (64) “ஏ டா! நினக்குத் தவறுண்டோ?’ (98) "ஆண்டலேக்கின்ற பறழ்மகனே! (94) போ சீத்தை! மக்கள் முரியே நீ! (92) இவ்வாறெல்லாம் கலித்தொகை , தன் நடையை நெகிழ்த்து, அக் காலப் பேச்சுத் தமிழுக்குச் சில சான் றுகளைத் தருகிறது. வரலாறு தொடர்கிறது. காலம் செல்லச் செல்ல இலக்கிய நடை யும் மாறிக் கொண்டிருக்கிறது. பூவின் மலர்ச்சியைப்போல், உயிரினங்களின் வளர்ச்சியைப் போல், எப்பொழுது எழுந்தது இந்த மாற்றம் என்று அறியாதபடி, மெல்ல மெல்ல, ஆல்ை உறுதியாக மாறிக்கொண்டு வருகிறது . இந்த ஆயிரக்கணக்கான ஆண்டு களில், இலக் கியங்களில் பேச்சுத் தமிழின் இடம் எது என்று பார்த்தால், பரவலாக, ஆல்ை உறுதி யாக ஆங்காங்கே அது நுழைக்கப்பட்டு வந்தது என்பதை மறுக்க முடியாது. தொல்காப்பியத் தி ற் குப் பிறகு நன் னு லார் செய்த மாற்றங் கள் அனேத்தும், பேச்சு மொழியால் மாறிய இலக் கியத்தின் மாற்றத்தைக் குறிக்கவே என்பதை நாம் மறந்து விடுவதற்கில்லே. இனி, 17, 18 - ஆம் நூற் றண்டுகளே ச் சேர்ந்த பள்ளு, குறவஞ்சி இலக்கிய ங் களுக்கு வரும் பொழுது, பேச்சு மொழி இலக் கியம் - ஒரு தனி ை ருவம் பெற்றுவிட் ட தாகவே கருத வேண்டியிருக்கிறது. கெம்பாறடையே! (கெம்ப rதே!-பேசாதே! என்பது வேடர் களின் பேச்சுத் தமிழ்) என்று சொல்லி வரும் வேடன், 'மதப்பயலும் பெலப்பானே' (பிழைப்பானே?) என்றெல்லாம் 21 O

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/218&oldid=743344" இலிருந்து மீள்விக்கப்பட்டது