பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி முதலெழுத்துக்கள் தமிழில் ர, ல, ட முதலிய நுனி நாவெழுத்துக்கள் சொல்லுக்கு முதலில் வரா. எனவே ராக்பெல்லர்” என்பதை 'இராக் பெல்லர்’ என்றும் டீசல் என் சு o என்றும் லண் டன்’ என்பதை இலண்டன்’ பதைத் தீசல்’ என்றும் எழுத வேண்டும். இவ்வாறு செய்யா விடின் தமிழ் உரை நடையில் இவற்றைப் புகுத் தி எழுதும்போது வேற்றுமை உருபுகளுடனும் நிலே மொழி வருமொழிகளுடனும் புணர்தல் முடியா து. "ராக் பெல்லர்’ என எழுதினுல் அ-ராக் பெல்லர் அராக் பெல்லர் எனவாகும். பொருள் மாறி விடுகிறது. 'இராக்பெல்லர்’ என வெழுதினுல் அ-- இராக் பெல்லர் = அவ்விராக் பெல்லர் எனவாகும். பொருளும் மாறுவதில்லே. மொழியிறுதியெழுத்துக்கள் தமிழில் க், ச், ட், ச், ப், ற், முதலிய எழுத்துக்கள் சொல்லுக்கு இறுதியில் வாரா. எனவே "வாட்’ (watt) என்பதை "வாட்டு’ என்றே எழுத வேண்டும். இவ்வாறு செய்யாவிடின் தமிழ் உரை நடையில் இவற்றைப் புகுத் தும் போது வேற்றுமை உருபு களுடனும் நிலே மொழி, வருமொழிகளுடனும், புணர்தல் முடியாது. வாட் + ஐ = வா ைட என வாகும். பொருள் மாறி விடுகிறது. "வாட்’ என எழுதி ல்ை வாட்டு + ஐ = வாட் டை எனவாகும். பொருளும் மாறுவதில்லே . மெய்ம்மயக்கம் தமிழில் இன்ன மெய்யெழுத்தை யடுத்து இன்ன மெய்யெ ழுத்தே வரலாம் என்ற விதி உண்டு. இதற்கு மெய்ம்மயக்கம் என்று பெயர் “Volt” என்பதை ஒல்டு என்றே எழுதல் வேண்டும். ஒல்ட்டு’ என எழுதுதல் பொருந்தாது. 330

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/338&oldid=743477" இலிருந்து மீள்விக்கப்பட்டது