பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெஸட்டில் அரிய தொரு விளக்கம் தந்துள்ளார். அதன் ஆங்கில மொழி மெயர்ப்பு காப்ரியல் லோரின்ஸ் என்பவர் பெயரில் இந்து நாளிதழில் (4-1-1969) வெளி வந்தது;- நாம் மரணமிலாப் பெருவாழ்வில் வாழக் கூடிய காலம் நெருங்கியுள்ளது. நமது உடலமைப்பு முதுமை அடைவதை-மூப்பு-நோக்கி அமைந்து விட்டது. அதல்ை மரணம் சம்பவிக்கிறது. ஆல்ை சாக் காடு என்பது மனித இயல்புக் கேபுறம்பானது. மூவா திருக்க வழி செய்தால் மரணத்தைத் தவிர்க்கலாம். அதற்கு முப்பு எப்படி ஏற்படுகிறது என்பதை ஆராய வேண்டும். உயிரணுக்களில் உள்ள D. N. A , R. N. A; என்ற அமிலங்கள் கணந்தோறும் பழுதடைந்து வருகின்றன. அவற்றைச் சிதையாமல் பார்த்துக் கொண்டால் உயிரணு மூவாது இருக்கும். அங்ஙனம் மூவா திருப்ப தற்கு வேண்டிய சாதனமும் உயிரணுவில் இல்லாமல் இல்லே. பழுதாகிக் கொண்டு வரும் அவ்விரு அமிலங்களேப் பழுதடையா மல் நிலைக்கச் செய்யும் மூவாமருந்து (Elixir) உயிரணுவில் இயல்பாக அமைந்துள்ளது. அந்த அமுதத்தைச் சுரக்கச் செய்ய மனிதல்ை முடியும்”. இனி வள்ளற் பெருமான் கூறுவனவற்றுள் ஒரு சிறிது காண்போம். எப்போதும் சலிப்பில்லாமல் சுத்தக் கரணமாய், அருள் வடிவாய், தாகை நிற்றலே சாகாக் கல்விக்கு ஏது” என்று கரணப் பெருந்திறல் காட்டு வாராயினர். தாகை நிற்றல் என்பது ஆன்ம ஒழுக்கம் எனப்படும். இஃது வள்ளற் பெருமான் வகுத்த உண்மை நெறியில் காணப்படுகின்றது. அவ்வுண்மை நெறியாவது: நாம் பெறும் புருஷார்த்தங்கள் நான்கு. அவை ஏமசித்தி, சாகாக் கல்வி, தத்துவ நிக் கிரகம் செய்தல், கடவுள் நிலை யறிந்து அம்மயமாதல் எனப்படும், இவற்றைப் பெறுவதற்கு நால்வகை ஒழுக்கங்களைப் பின்பற்ற வேண்டும். அவை இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், சீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்பன. முதல் மூன்று ஒழுக்கங்களைக் கை வரப் பெற்ற ஒருவன் யா8ன முதல் எறும்பு ஈருகத் தோன்றிய சரீரங்களில் உள்ள rவான்மாவே திருச்சபையாகவும் அதனுள் பரமான்மாவே பதி பாகவும் கொண்டு, யாதும் நீக்கமற, எவ்விடத்தும் பேதமற்று

347

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/355&oldid=743496" இலிருந்து மீள்விக்கப்பட்டது