பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை நூல்களுள் மூன்று மாதங்களின் பெயர்களே இடம் பெற்றுள் ளன. அவற்றுள்ளும் தை மாதத்தின் பெயர் பெரு வழக்காகப் பயின்று வந்துள்ளதை நாம் காணுகின்ருேம், (அகம். 269, ஐங்கு 84, கலி 59, குறுந் , 59, புறம். 70 முதலியன) இத் திங்கள் தமிழர் வாழ்வில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இதற்கு அடுத்த திங்களாகிய மாசியைப் பற்றிய குறிப்பு பதிற்றுப் பத்தில் மட்டும் காணப் பெறுகிறது (59:2) பங்குனி மாதத்தைப் பற்றிய குறிப்பு புறநானூற்றில் இடம் பெற்றிருக்கிறது (229:5). கார்த்திகைத் திங்களில் சிறப்பு மிக்க விழாவாக க் கொண் டாடப் பெறும் கார்த்திகை விளக்கீட்டைப் பற்றிய குறிப்புக்கள் அகநானூற்றில் காணப்பெறுகின்றன. ஆனல், கார்த்திகை என்று மாதத்தின் பெயர் சுட்டப் பெறவில்லை. எனினும் பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றன "கார்நாற்பதும்” (26), களவழியும் (17) சுட்டுகின்றன . இந் நான்கு திங்கள்களேத் தவிர சித் திரை, ஆடி போன்ற மாதங்களின் பெயர்கள் சங்க மருவிய காலத்தில் தோன்றிய சிலப்பதிகாரத்தில் காணப்பெறுகின்றன. (5:64; 23; 133). பழைய தமிழ் இலக்கியங்களுள் இந்த ஆறு மாதங்களைப் பற்றிய குறிப்புக்களே காணப்பெறுகின்றன. தேவார காலத்தில் தான் மாதங்களின் பெயர்கள் பெரு வழக்குப் பெற்றுள்ளன. திருஞான சம்பந்தரது திருமயிலேத் திருப்பதிகத் தில் ஐ ந் து மாதங் களின் பெயர்களேக் குறிப்பிட்டுள்ளார்: 1 ஐப்பசி (2, 47, 2), 2 கார்த்திகை (2 : 47 3), 3. தை (2 : 47 :5) 4 மாசி (2 : 47 :6), 5. பங்குனி (2 : 47 : 7) எனவே பல்லவர் காலத்தில் மாதப் பெயர்கள் வழக்கில் இருந்தன எனலாம். மாதங்கள் எவ்வாறு பாகுபாடு செய்யப் பெற்றன?’ என்பது ஆராய்ச்சிக்குரியதாகும். மதியின் இயக்கத்தை-வளர்ச்சியை யும், தேய்வையும் - அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப் பெற்ற காலமே மாதமெனப் பெயர் பெற்றது, என்பர். மாதத்தைத் "திங்கள்’ என்று குறிப்பிடுவதும் இதற்குச் சான்று பகருகிறது. 37.8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/385&oldid=743529" இலிருந்து மீள்விக்கப்பட்டது