பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள் நாட்டமா? அரசியல் நாட்டமா? திரு. சு. சாமி ஐயா அண்ணுமலேப் பல்கலைக்கழகம் முக்கோடி வானளும் முயன்றுடைய பெருந்தவமும் எக்கோடி யாராலும் வெலப்படாய் எனக் கொடுத்த பெரு வர ம் உடையன. ய் இலங்கையின் பெருவேந்தனய், உலகம் மூன்றும் தன் கீழ்ப்படுத்த வெற்றி வீரனுய் வாழ்ந்த வகிைய இராவண னின் தம்பியர் பலர். அவருள், கருத்திலா இறைவன் தீமை கருதினல் அதனேக் காத்துத் திருத்தலாம் ஆகில் அன்றே திருத்தலாம். இல்லையேல் பொருதொழிற்கு உரியராகி ஒருத்தரின் முன்னம் சாதலே உண்டவர்க்கு உரியது என்னும் உறுதிப்பாடு கொண்டவன் கும்ப கன்னன் . கர தூடணர்களோ உண்டவர்க் குரியதாகிய முன்னம் சாதலே முன்னமே முடித்துக் கொண்டவர் கள். எஞ்சியவகிைய வீடணனே மலரின் மேல் இருந்த வள்ளல் வழுவிலா வரத்தில்ை உலேவிலாத் தருமம் பூண்டு வாழ்வோன வான். பின்னவகிைய வீடணன் முன்னவனின் தவற்றினேச் சுட்டி மந்திர அவையில் மும்முறை அறிவுரை கூறி இராவணனைப் பிரிந்து இராமன் பக்கல் வந்து சேர்ந்தவன். வந்தவனே ச் சேர்க்கக்கூடாது என எதிர்த்தவர்கள் பலர். தலேயாய சுக்கிரீ வன் முதலியோர் கருத்தினே ஏற்றுக் கோடாது அநுமன் கருத் தினை ஏற்று வீடணனே ஏற்றுக் கொண்டான் இராமன். இதல்ை இராமனின் அடைக் கலம் கொடுக்கும் கருணைத் திறத்தை நினைந்து பாராட்டுவோர் பலர். அதுபோலவே வீடணனின் அருள் விரும்பிய தூய நெஞ்சினைப் பாராட்வோர் பலர். வைணவ சமயத்தினரோ விபீஷணுழ்விர் எனப் பாராட்டுகின்றனர். "வீடணனைத் துரோகி” என இகழ்கின்றவரும் இல்லாமல் இல்லே. 388

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/395&oldid=743540" இலிருந்து மீள்விக்கப்பட்டது