பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

' மாணிக்கவாசகர் - பேறு ” திரு சி. இராமலிங்கம் அண்ணுமலேப் பல்கலைக்கழகம் இத்தொடர், முத்துத்தாண்டவரது பாடல்களுள் ஒன்றில் காணப்பெறுவதாகும். மணிவாசகப் பெருந்தகை பெற்ற பெரும் பேற்றினை நமக்கு இத்தொடர் சுட்டுகிறது ; இதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம். == முத்துத்தாண்டவரது வரலாற்றுச் சுருக்கம் 'முத்துத்தாண்டவர் என்னும் பெரியார் சீகாழிப்பகுதியில் இசை வேளாளர் குலத்தில் பிறந்து, எல்லையில் பெருங்கூத்து விளேக்கும் ஆடவல்லானின் மீது ஆராத காதலைப் பிறப்பிக்க வல்ல இசைப் பாடல்கள் பல பாடினர். இவரது காலம் 18-ம் நூற்ருண்டிற்குப் பிற்பட்டதாகாது என்று காலஞ்சென்ற பேராசிரியர் கா. சுப்பிரமணியப்பிள்ளே கருதுகிருர்கள். முத்துத் தாண்டவர் காழியில் எழுந்தருளியுள்ள இறைவனுக்கும், இறை விக்கும் வாச்சியத் தொண்டு புரிந்து வந்த மரபில் பிறக்கும் பேறு பெற்றர். இளமையிலேயே இவர் சிவநேய மிக் கவராக விளங்கினர். ஆல்ை முற்பிறப்புகளில் ஈட்டிய வினையின் விளை வாகக் கொடிய நோயில்ை வாடினர் , தமது குலத்தொழிலைச் செய்ய இயலாதவராயினர். ஆயினும அவர் நாளும் ஆலயம் சென்று காலந்தொறும் நிகழும் வழிபாடுகளை முறையாகத் தரிசித்து வந்தார். ஆலயத்தில் நாள் தொறும் பாட்டிசைத்த கணிகை மாதின் பக்தி பரவசத்தில் மனம் ஒன்றினர். அவ் வம்மையார் இல்லம் சார்ந்து மேலும் மேலும் பாடல்களேக் கேட் பதில் ஆர்வம் மீதுாறிற்று. ஆல்ை, முத்துத் தாண்டவரது குடும் 450

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/457&oldid=743609" இலிருந்து மீள்விக்கப்பட்டது