பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்திற்கும், கணிகை மாதின் குடும்பத்திற்கும் இடையே நிலவிய பகைமையில்ை தாண்டவர் இவ்வம்மையாரது இல்லத்திற்குச் செல்லுதல் ஆகாது என்ற தடை பிறந்தது. ஒருநாள் ஆலயத்துள் விடை முதலிய ஊர்திகள் வைக்கப் பெறும் அறையினுள் களைப்பு மிகுதியில்ை துயின்று விட்டார். காழி இறைவி, தாண்டவர் பசிகண்டு பொருது, ஆலயத்தில் இறைபணி உக க்கும் ஆதி சைவப் பெரியாரது செல்வியின் வடிவந்தாங்கி, பசிப்பிணியைப் போக்கினர். தமது பசிப்பிணி அகன்றதுபோல உடற்பிணியும் அகலுதல் வேண்டும் என்று தாண்டவர் இறைஞ்சிர்ை தில்&லயம்பதி போந்து அம்பல வான இன வழிபடுமாறு வானினின்று ஆன பிறந்தது. இவ் வா8.ணயின் வண்ணம் தில் கலக்கு வந்து தாண்டவர் தவருது தரி சித்து வருவாரார்ை. இறைவன் திருமுன் வழிபடும்போது, அடி யார் கூட்டத்திலிருந்து பூலோக கயிலாசகிரி சிதம்பரம்” என் னும் தொடர் மொழி வெளிப்பட்டது. அத் தொடரையே முதலா கக் கொண்டு கூத்தப் பெருமான் இன்னருளால் பாடத்தொடங்கி ஞர். இவ்வாறு நாள் தோறும் பாடப் பெற்ற பாடல்கள் அண்ை மலைப் பல்கலைக்கழகத்தாரால் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. இவற் றுள் கீர்த்தனம் 60. மாணிக்கவாசகர் பேறெனக்குத்தரவல் லாயோ அறியேன்” என்பதே இங்கே நமது ஆய்விற்குரியது. மாணிக்கவாசகர் திருவாசகத்தின் உட்பொருள் யாது என்று கேட்டபோது மணிவாசகப் பெருந்தகை, கூத்தப் பெருமானைச் சுட்டித் தாம் தமது திருஉருக்கரந்தார் என்பது தொன்று தொட்டு வழங்கிவரும் செய்தியாகும். இச் செய்திக்கு அரண் செய்யும் அகச்சான்று கள் திருவாசகத்தில் உள. முத்துத்தாண்டவர், மாணிக்க வாச கர் பெற்றதைப் போன்று குறித்தற்குரிய காரணம் யாது ? தாண்டவரது கீர்த்தனம் விளக்கம் நல்குகிறது . 1. மாணிக்க வாசகர் பேறெனக்குத்தர வல்லாயோ அறியேன் காணிக்கையாகக் கொடுத்தேன் உனக்கென்ன ஆணிப் பொன்னே தில்லை அம்பல வாணு நோயும் வறுமையுஞ் சண்டையிடாதே நோக்கரை நோக்காக நோக்கிவிடாதே 45 |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/458&oldid=743610" இலிருந்து மீள்விக்கப்பட்டது