பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'நற்றமிழ்க்கின்றுனே' திருமதி, பா. செளந்தரா உடுமலைப்பேட்டை சங்கம் மருவிய காலம் வரை தொல் காப்பியமே மேல்வரிச் சட்டமாக இருந்து வந்திருக்கின்றது. இடைக் காலத்தில் நன் னுரல், வீரசோழியம், யாப்பருங்கலம், தண்டியலங்காரம் போன்ற வை எழுந்தன. புதிதாக இலக்கணச் சொல்கள் தோன்றுவதற்கு, மொழி வளர்ச்சியே முக்கிய காரணமாக இருப்பதை மொழி வரலாறு காட்டுகின்றது இலக்கியம் கண்ட பின்னரே இலக் கணம் தோன்றுகிறது. தொல்காப்பியத்தினின்றும் மாறுபடும் சில நன்னூல் விதிகட்கு, ஞான சம்பந்த ரது தேவாரப்பாக்களும் வழிவகுத்துள்ளமையை ஈண்டுக் காணலாம். வினையெச்சங் கட்கு முடிபு வேறுபாடு கூறும் நன்னூல் நூற்பாவிற்கு விளக்கம் கூறும் உரையாசிரியர் 'வினையெச்சங்கள் நடந்து வந்தான் எனக் காரணப் பொருட்டாயும், நெல் விளேய மழை பெய்தது எனக் காரியப் பொருட்டாயும், உண்ண வந்தான் எனக் காரண காரியப் பொருட்டாயும் வருதலின்றி 'வண் கமலம் முகங்காட்ட ...கருநெய்தல் கண் காட்டும்" எனக் காரண காரியத் தொடர் பின்றியும் வரும்- என, சம்பந்தர் தேவாரத்தொடரையே மேற்கோள் காட்டியுள்ளமை நோக்கற் பாலது (நன் நூ. 350). முதல், சினை, அளவு, நிறை ஆகியவற்றின் அடியாக ஆகு பெயர் அமையும் என்பர் தொல் காப்பியர் (வேற். மய 31,33). நன்னூலார் இன்னும் விரித்து, பொருள் முதலாறு, அளவை, செ ல், தானி, கருவி, காரியம், கருத் தன் எனப் பலவற்றைக் கூறுகின் ருர் (290). பொருள் முதலாறுள் அடங்கிய தொழிலின் 485

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/492&oldid=743648" இலிருந்து மீள்விக்கப்பட்டது