பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சக்திகள். இறைவன் செய்யும் அளப்பருஞ் செயல்கள் படைப் பாதித் தொழில்கள் முதலியன எல்லாம் அகத் தீ வளர்ப்பு நெறி. அகத்தே வளர்க்கும் தீயை உள்ளிட்ட யோகமானது அருள் ஒளியாக விளங்கி, யோகஞ் செய்தவனேக் காப்பது மட்டுமன்றி உலகையுங் காக்கும் வன் மையுடையதாக அமைகிறது. அகத்தியம் என்பது எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே” என முடிப்புக் கூறிக் காட்டினர் திருமூலர். எனவே அகத்தி நெறி - அங்கியோகம். அந்நெறியையுடைய பெருமகனே அகத்தியன். அச் சொல் மருவி அகத்தியன்’ என்ரு யிற்று. இதற்கு மாருன நிலையில் புறத்தே வெளிப்படையாகப் புலப்படுமாறு தீ வளர்த்து வேள்விசெய்யும் நெறி புலத்தி நெறி; புலத்தீநெறி என்பது மருவிப் புலத் தியநெறி என்ருயிற்று. அதில் வல்லவன் புலத் தியன். இவ்வாறு புலப்படும் வகையில் வெளியில் அதாவது தன் உடலுக்கு அப்பால் தீவளர்த்துப் பெறும் நெறியில் வல்லவர்களாய் வாழ்ந்த முனிவர்களே அவர்களின் நெறியை அடிப்படையாகக் கொண்டு ‘அக்னி’ என்ற சொல்லே இறுதியிற் சேர்த்து ஜமதக்னி, திரண துாமாக் னி என்று கூறும் வழக்கம் இருந்தது எனக் கொள்ளினும் அமையும். இப்புலத்தி மரபில் வாராது, அதற்கு மாறுபட்ட அகத்தீயோக நெறியில் வந்தவன் அகத்தியன் ஆதலின் “நடுவுள. அங்கி அகத்திய” என்று குறிப்பிட்டார் திருமூலர். "இருந்தமனத்தை இசைய நிறுத்துதல்” (332) என்பதே நடுவுநிற்றல். அவ்வாறின்றி உலகமக்கள் புறவேள்வி செய்து, சில சாதாரண சக்திக ளேப் பெற்றுச்சில நாட்கள் வாழ்ந்து மடியவே எண்ணுகின்றனர் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு நடுவு நில்லாது உலகம் சரிந்து கெடுகின்றது என்று கூறினர். அகத்திய நெறி இவ்வுலகில் மீண்டும் எழுச்சியுறுத்தப் பெற்றது என்பதே முதற் செய்யுளின் திரண்ட கருத்தாகும். புறத்தே தீ வளர்த்து வேள்விசெய்து பல்வகைச் சக்திகளைப் பெற்றவர்களெல்லாம் அகத்தி யோகத்தில் வல்லவனை அகத்தி யனிடம் தோற்றேடினர். என்ற வரலாறுகளையெல்லாம் இவ்வடிப் படையில் நோக்கி உண்மை தெரியவேண்டும். இவ்வகத்திய 498

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/505&oldid=743663" இலிருந்து மீள்விக்கப்பட்டது