பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை ஓவியங்கள் பல உவகை அணிகளில் நலம் பெறு வதையும் இவள் பாடல்களில் காணலாம். கண்ணனின் கண் கள் தாமரை மலர் போன்றன (நா. தி. 14), திருவடிகள் பொற்ரு மரை போன்றன (திரு. 29) என்றும், கடல், பைங்கிளி, கருவுடை முகில், கருவிளை, காயா வண்ணன் கண்ணன் (நா. தி. 9, 50, 6) என்றும் பாடி மகிழ்கிருர், தம்மை மானிடவர் க் கென்று மணம் பேசின் அந் நிலை வானிடை வாழுமவ் வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி, கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து கடப்பதும், மோப்பதும் செய்வ தொப்பதென (நா. தி. 5) உறுதி யாகக் கூறிவிடுகிரு.ர். கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் (திரு. 1) ஆழி மழைக் கண்ணு (திரு. 4) பூவைப் பூ வண்ணு (திரு. 23) எனவரும் அடிகளிலும் கண்ணனின் கவின் காணலாம். ஆண் டாளுக்கு இறைவன் மீது இருந்த காதலால் இயற்கைப் பொருட் களிலெல்லாம் கண்ணனை க் காண்கிருர். காண்பன அனைத்தும் அவன் வடிவாக, கேட்பன அவனே நினைவூட்டுவனவாய் அமை கின்றன (நா. தி. 86, 91) . மாலவனே நினைவூட்டுவதால் இயற்கை தன் துன்பம் குறையத் துணைபுரியும் என ஆண்டாள் நம்புகிறர். இயற்கை மனித உயிர்க்காக இரங்குதல் போல அமையும் குறிப்பு அகப் பொருளில் காமம்மிக்க கழிபடர் கிளவியில் காணலாம். இக் குறிப்பு ஆங்கில இலக்கியத்திலும் உண்டு. எலிசபேத் காலத்தின் முற்பகுதியில் வாழ்ந்த சர் தாமஸ் வியட் (Sir Thomas wyatt) எள்ற கவிஞர் கைக் கிளேக் காதலுக்கு ஏற்ப இயற்கை அரங்கினைப் பயன்படுத்துவதை இங்கே நினைவு கூரலாம். இந்த மனநிலையில், குயிலிடம் வேண்டு கிருர் ஆண்டாள்: போதலர் காவில் புதுமணம் நாறப் பொறிவண்டின் காமரங்கேட்டு-உன் காதலி யோடுடன் வாழ் குயிலே-என் கருமாணிக் கம்வரக் கூவாய். -நா. தி. 44 இயற்கைப் பொருட்களேயெல்லாம் தம்மீது கருணை காட்டுமாறு வேண்டுகிருர் (நா. தி. 88). மேகத்தையும் கடலேயும் கண்ண னிடம் தூதுரைத்து வருமாறு வேண்டுகிருர் (நா. தி. 79, 102). 50.2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/509&oldid=743667" இலிருந்து மீள்விக்கப்பட்டது