பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து வாச நறுங்குழலாய் ச்சியர் மத்தில்ை ஒசைப்படுத்தும் தயிராவம் ஒருபுறம் கேட்கிறது. (திரு. 7) இங்ங்னம் அழகிய தொரு காலேயை ஆண்டாள் நமக் குக் காட்டுகிரு.ர். இயற்கை நிகழ்ச்சிகளே நுணுகிப் பார்த்து ஏற்புடைய அழகிய சொற்களால் அவற்றைப் பாட்டாக வடிக்கும் திறத்தை அவர் பாடல்களில் காணலாம். மேகம் ஆழியுள் புகுந்து, நீரை முக ந்து, கறுத்து, மின்னி, அதிர்ந்து மழையாகப் பெய்கிறது என மழை பொழியும் நிகழ்ச்சியை முறையாக 'ஆழிமழைக் கண்ணு’ (திரு. 4) என்ற பாடலால் உணர்த்துகிருர், திங்கள் மும்மாரி பெய்வதால் வயல் பகுதிகளில் செந்நெல்லூடே கயலு கள, பூங்குவளைப்போதில் பொறி வண்டு கண் படுக்கும் என மழை பெய்வதால் ஏற்படும் பயனே யும் (திரு. 3) இயம்புகிருர். கனேத் திளங் கற்றெருமை தன் கன் றினே நினைத்து, இரக்கமுற்றுப் பால் சொரியும் முல்லே வளத்தையும் நயம்படக் காட்டு கிருர். (திரு. 12) மலேமுழைஞ் சில் உறங்கிய சிங்கம் விழித்து வெளிவரும் செயலே க் குறிக்கிருர் (திரு. 23). வில்லிபுத்துணரும் திருமா லிஞ்சோலேயும் இயற்கை நலஞ்சூழ் பகுதிகளாம். மென் ன டை அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்துTர்’ --- -நா. தி. 46 சந்தொடு காரகிலும் சுமந்து தடங்கள் பொருது வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ் சோலே. -நா. தி. 84 கள்ள விழ் சண்பக மலர் கோதிக் களித்தி ைச பாடும் குயில்களே யும் (நா. தி. 43), நடமாடித் தோகை விரிக்கின்ற மாமயில்களே யும் (நா. தி. 100) காலே எழுந் திருந்து பாடும் கரிய குருவிக்கணங் களையும் (நா. தி. 91). பாடு கிருள். நீர் நிலைகளில் காலேக் கதுவிடு கின்ற கயலொடு வாளேயும் தாமரை மலர்களும் நிறைந்து காணப் படுகின்றன. (நா. தி. 25, 26). சோலே களில் தவள நகை காட்டும் முல்லேயும் (நா. தி. 85) கார்க் கோடல் பூக்களும் (நா. தி. 94), காயா, கருவிளே மலர்களும் மலர்ந்து அவர்தம் பாடல்களேயும் அழகுபடுத்துகின்றன. 501

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/508&oldid=743666" இலிருந்து மீள்விக்கப்பட்டது