பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

என்று படித்தனர். இதனேயே தமிழ்நாடு அரசு தொல் பொருள் ஆய்வுத்துறை இயக்குநர், Dr. R. நாகசாமி அவர்கள் ஏற்றுக்கொண்டு, 'தா - தை என்ற் இசை - கூத்து எழுத்துக்களைப் புணர்த்தவன் மணிய வண்ணக்களுகிய தேவன் சாத்தன்” என்று கூறினர். இக்கல்வெட்டு, கி. பி. முதல் நூற்ருண்டுக்கு உரியது ஆதலின், இசை எழுத்துக் களேத் தொகுத்துக் கல்லில் பொறித்த பெருமை தேவன் சாத்தனைச் சாரும் என்று அறிய வருகிறது.

சோழர் காலத்தில் கோயில்களில் தேவார இன்னிசை வெகுவாகப் போற்றப் பெற்றது. பாடல் பெற்ற கோயில் களில் திருப்பதியம் விண்ணப்பிக்க (தேவாரம் ஒதுவதற்கு)ப் பிடாரர்கள் (ஓதுவார்கள்) நியமிக்கப் பெற்றனர். திருப் பதியம் விண்ணப்பிக்கத் தரப்பெற்ற நிபந்தங்களில் மிகப் பழமையான நிபந்தம் மூன்ரும் நந்திவர்மன் காலத்ததாகும். முதற்பராந்தகன் காலத்துத் திருத்தவத்துறை (லால்குடி)க் கல்வெட்டினின்று மூன்று சந்திகளிலும் இரண்டு பிராமணர் திருப்பதியம் விண்ணப்பித்தனர் என்று அறியவருகிறது. தஞ்சைப் பெரிய கோயிலில் 48 பேர் நியமிக்கப் பெற்றனர்; இவர்கள் யாவரும் சிவபூசகர். தேவாரம் ஒதுங்கால் உடுக்கையும் கொட்டி மத்தளமும் வாசிக்கப் பெற்றன. உடுக்கை வாசித்தவன், சூரிய தேவக் கிரமவித்தன் ஆன ஆலாலவிடங்க உடுக்கை விச்சாதிரன். உடுக்கையில் வல்லவன் ஆதலின் உடுக்கை விச்சாதிரன்’ என்றும், வேதத்தைக் கிரம முறையில் அத்யயனம் செய்தவன் ஆதலின் கிரமவித்தன் என்றும் கூறப்பெற்றனன். திருவா மாத்துார்க் கோயிலில் 16 குருடர்கள் திருப்பதிகத்தைப் பாடி னர். அவர்களுக்குக் கண்காட்டுவார் இருவர் இருந்தனர்; கோயில்களில் இசையும் நடனமும் வல்ல பெண் மகளிர் இருந்தனர்; அன்னேர் அடிகள் மார், மாணிக்கத்தார் எனப் பெற்றனர். அப்பெண்டிரும் திருப்பதியம் விண்ணப்பித்தனர். வீர ராஜேந்திரன் காலத்துத் திருவொற்றியூரில் தேவர் அடி