பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139

யார்கள் திருவெம்பாவை விண்ணப்பிக்கவும், திருப்பதியம் பாடவும் நிபந்தம் அளிக்கப்பெற்றது. அக்கல்வெட்டினின்று, தேவாரம் பாடும் பொழுது, சுவை பொருந்தச் சத்துவம் தோன்ற அபிநயத்தோடு பாடினர் என்று அறியலாம்.

நாலாயிரப்பிரபந்தம் ஒதுவதற்கும் நிபந்தங்கள் அளிக்கப் பெற்றன. திருமங்கை யாழ்வார் அருளியது திருநெடுந்தாண் டகம். 'இந்தத் திருவோலக்கத்திலே திருநெடுந்தாண்டகம் விண்ணப்பம் செய்வார்க்கு ஒருகாசு இடுவதாகவும்’ என்று திருக்கோவலூர்க் கல்வெட்டில் காணப் பெறுகின்றது. திரு வாய் மொழியை அருளியவர் நம்வாழ்வார். உத்தரமேரூர், எண்ணுயிரம், திருபுவனி, திருக்கோவலூர், திருக்கண்ணபுரம் முதலிய திருப்பதிகளில் திருவாய்மொழி விண்ணப்பம் செய்ய நிபந்தங்கள் தரப்பெற்றன. தேட்டருந்திறல்’ என்பது குல சேகராழ்வார் அருளிய திருமொழியில் இரண்டாம் பத்து. குலோத்துங்க சோழனது ரீரங்கம் கல்லெழுத்தினின்று தேட்டருந்திறல் விண்ணப்பம் செய்யப்பெற்ற செய்தி

அறியப் பெறும்.

முதற்குலோத்துங்க சோழனது மனைவி ஏழிசை வல்லபி எனப்பட்டாள். இவள் தன் கணவன் இயற்றிய இசைநூஜலப் பயின்று அம்முறையைப் பின்பற்றி இனிமையாகப் பாடி ஏழிசையையும் வளர்த்தாள். ஆசிரியர் ஜயங்கொண்டார் 'ஏழு பாருலகோடு ஏழிசையும் வளர்க்க உரியாள்" என்றது இதனை வலியுறுத்தும்.

இசைக்கருவிகளில் வல்லவர்கள் வாத்ய மாராயன் என்ற சிறப்புப் பெயரால் வழங்கப் பெற்றனர். ஆரியம் பாடவும் தமிழ் பாடவும் வல்லவர்களே இராசராச சோழன் நியமித்தனன். வங்கியம் இயக்கவும், பாடவியம் இசைக்க வும், உடுக்கைவாசிக்கவும், வீணை வாசிக்கவும் நிவந்தக்காரர் நியமிக்கப்பெற்றனர்.