140
வீ8ணயைப்பற்றிச் சாஸனங்களினின்று அரிய செய்தி கள் தெரிய வரும். பரிவாதினி பற்றி முன்னரே கூறப்பட்டது. நரசிம்மவர்மன் காலத்துத் தருமராசர் தேரில் விதைர மூர்த்தியின்சிற்பம் உளது. தண்டு என்னும் வீணையை வலது கையிலுைம் இடது கையிலுைம் சாய்த்துப் பிடித்து வீணை வாசிக்கும் நிலை காணப்படுகிறது. இராசசிம்மன் எடுப்பித்த கயிலாசநாதர் கோயிலிலும் வீணுதரகைச் சிவ பெருமான் காட்சி யளிக்கிருர் இச் சிற்பங்களில் உள்ள வீ8ணக்கும் இக்கால வீணைக்கும் வேறுபாடு உண்டு. ஒரு சிற்பத்தில் வீணைக்கு நான்கு நரம்புகளும், மற்ருெரு வீணை யில் ஒரே நரம்பும் காணப்படுகிறது. வீணை வாசிப்பவர்க்கு அளிக்கப் பெற்ற இறையிலி நிலம் வீணைக்காணி’ எனப் பெற்றது. திண்டிவனம், வேம்பத்துார், திருக்கடவூர்த் திரும யானம் ஆகிய தலங்களில் வீணே வாசிப்பதற்கு நிபந்தம் அளிக்கப் பெற்றமை அறியவருகிறது.
தேவார இசையைப் பரப்புவதற்குத் தேவாரத்திருப்பதி கங்களைக் கோயில்களில் சிலாசாஸனம் செய்யும் பழக்கம் இந்நாளில் பரவலாக உள்ளது. முன்னுட்களிலும் இந்த முறை இருந்திருத்தல் கூடும். கொள்ளிடத்தின் வடகரை யில் கோவந்த புத்துாரில் வாழ்க அந்தணர்’ என்று தொடங்கும் திருப்பாடல் சிலாசாஸனம் செய்யப்பெற்றுள்ளது. திருமுறை ஏடுகளில் காணப் பெருத ஒரு திருப்பதிகம் திரு விடைவாயில் என்ற ஊரில் சாஸனமாக உள்ளது.
திருச்செந்துறைக் கல்வெட்டொன்று வெண்பாவான் அமைந்தது. அது பின்வருமாறு:
உண்ணலாம் நெய்யொடுசோ ருேவாதே எப்பொழுதும் பண்ணெலாம் பாடி யிருக்கலாம் - மண்ணெலாம் அகன்மாட நீடூர்கூர் கங்கை சடைக்கரந்தான் பொன்மாடத் தெப்பொழுதும் புக்கு. இப்பாடலில் பண்ணெலாம் பாடி யிருக்கலாம்” என்ப தால் பண் ஒன்றப் பாடும் முறை சோழர் காலத்து இருந்த மை பெறப்படும். --