பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20

கோட்டுரில்

இது சம்பந்தர் தேவாரம் பெற்ற சோழ நாட்டுத் தலங் களுள் ஒன்று. (இது திருக்களர் என்ற தலத்துக்கு 3 கல் தொலைவில் உள்ளது). இவ்வூர்க் கோயிலில் நீர் இறைக்கும் ஒரு உவச்சனுக்காக நிபந்தம் அளிக்கப் பெற்றது. இவ்வறத்தைச் செய்தவன் கங்கைகொண்ட சோழபுரத்துத் தரணி சிந்தாமணிப் பெருந்தெருவில் இருந்த ஒரு வியாபாரி ஆவன். இதனை மூன்றாம் குலோத்துங்க சோழனின் மூன்றாம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டில் (454 of 1912) காணலாம்.

சீகாழியில்

சீகாழி, திருஞானசம்பந்தர் திருவவதாரம் செய்த தலம். இத் தலத்துப் பெரிய கோயிலில் திருஞானசம்பந்தருக்குத் தனி ஆலயம் உண்டு. இவ்வாளுடைப் பிள்ளையார் திருக்கோயிலின் முதற் பிரகாரத்தைப் பழுது பார்த்தற்குக் கங்கை கொண்ட சோழபுரத்தவன் ஒருவன், கங்கைகொண்ட சோழ புரத்துக் கங்கைகொண்டசோழன் திருமதிளுக்குள் வடகூரில் உத்தம சோழப் பெருந்தெருவிலுள்ள வானமாளிகை உடையான் வேம்பன் வைசியார் மகன் நுரம் பூண்டான் (தருமபுர ஆதீனப் பதிப்பு. 2-ம் திருமுறை தல வரலாற்றுக் குறிப்பு - பக்கம் 65) என்பவன் மூன்றாம் இராசராசனின் இரண்டாம் ஆட்சியாண்டு 219-ஆம் நாளில் பணம் அளித்திருக்கிறான் (388 of 1918).

மடவிளாகத்தில்

இவ்வூர் செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தது. இங்கு மூன்றாம் இராசராச சோழனின் 18-ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டுள்ளது (484 of 1926). கங்கைகொண்ட சோழபுரத்துக் கங்கைகொண்ட சோழேச்சரத்து நிமந்தக்காரன் ஒருவன், கல்லூரான க்ஷத்திரிய சிகாமணி நல்லூர் ஊரவரிடம் திருவீரட்டானமுடைய நாயனார் திருப்பள்ளியெழுச்சிக்காக