பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
21


8 கண்ட கோபலன் மாடை அளித்தனன். இதற்காக 2000 குழி இறையிலிநிலத்தை ஊரவர் கோயிலுக்கு உரிமையாக்கினர்,

முடிப்புரை

மேலே குறிப்பிட்டவாறு பலர் கங்கைகொண்ட சோழ புரத்தில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்களில் அறஞ்செய்தவர்களாகக் காணப் பெறுகின்றனர். அன்னோரும் பிறரும் இன்னும் எத்தனையோ கோயில்களுக்குப் பல அறங்களைச் செய்திருக்கலாம். அவை இந்நாளில் அறியக் கூடவில்லை. இன்னணம் நல்லறஞ் செய்தோர் பலரும் வாழ்ந்த கங்கைகொண்ட சோழபுரம், இன்று ஒரு சிற்றுராகப் பழம் பெருமை சிறிதும் தோன்றாமே இருக்கிறது. பல அறங்களேயும் செய்தாருடைய அறப்பயன் என்று தான் வெளித்தோன்றுமோ? என்றுதான் கங்கைகொண்ட சோழேச் சுரர் பழம் பெருமையுடன் காட்சியளிப்பரோ?

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வா யெல்லாம் செயல். - திருக்குறள்”