பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46


வாகூர்க்கல்லூரி

வாகூரில் ஒரு வித்யாஸ்தானம் இருந்தது. இது வடமொழிக் கல்லூரி, 'கங்கையின் வேகத்தைச் சடையில் தாங்கிய சிவனைப்போல் சதுர்த்திசைகளிலிருந்தும் வந்த கல்வி வல்லார்கள் பொருந்திய ஆழமுடைய வித்யா நதி வாகூர்க் கிராமத்தில் தங்கி விட்டது' என்று (செ. 25)-ல் உள்ளது; எனவே வாகூர்க்கல்லூரி கல்விக்கடல் போல் விளங்கியது ஆதல் வேண்டும். "சதுர்த்திசாகணாகுலா" என்பது பேராசிரியர் உல்ஷ் கொண்ட பாடம் [E. I , Vol. VIII Part I, Page 11]. ஆனால் திரு. H. K. சாஸ்திரி "சதுர்த் தசகணாகுலா" என்று பாடம் கொள்வதோடு, வாகூர்க் கல்லூரியில் 14 கணத்தவர் இருந்தனர் என்றும், இவ்வூர்ப் பேரறிஞர்களால் இக்கல்லூரி நிர்வகிக்கப்பட்டது என்றும் கூறுவர். டாக்டர் மீனாட்சி அவர்கள் "சதுர்த்தசா வித்யா ஸ்தான விதித பரமார்த்த ஸ்ய" என்று (Gupta Incriptions P. 113) பிறவிடங்களில் வருதலையும், அங்குக் கொடுக்கப் பெற்ற விளக்கங்களையும் காட்டி, 'சதுர்த்தசவித்யா' என்பது 4 வேதங்கள், 6 அங்கங்கள், புராணம், மீமாஞ்சை, நியாயம், தருமசாஸ்திரம் என்னும் பதினான்குமாம் என்பர். எனவே வாகூர் வித்யாஸ்தானத்தில் பதினான்கு வித்தைகள் கற்பிக்கப் பெற்றனவாதல் தெளிவு.

அறம்

வாகூர் வித்யாஸ்தானத்தை நடத்தச் சேட்டுப் பாக்கம், விளாங்காட்டான் கடுவனூர், இறைப்புனைச்சேரி என்ற மூன்று ஊர்களும், பழைய அறமும் பிரமதேயமும் நீக்கி முன் பெற்றாரை மாற்றி வாகூர் வித்யாஸ்தானத்துக்கு வித்யா போகமாக அளிக்கப்பெற்றன. இம் மூன்றூர்களும் வேசாலி ப்பேரரையன் ஆட்சியிலுள்ள நாட்டுட்பட்ட ஊர்களாகும். அரசனது இசைவு பெற்றுத் தன் நாட்டுள்ள இம்மூன்றூர்களையும் இத்தலைவன் இந்த வித்யாஸ்தானத்துக்கு அளித்தனன். சமஸ்கிருதப் பிரசஸ்தியில், விளாங்காட்டங் கடுவ-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/53&oldid=1388527" இலிருந்து மீள்விக்கப்பட்டது