பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48


இவற்றைப் பின்வருமாறு வரைந்து காட்டல் தகும்:

இந்நாளில்

விளாங்காட்டங்கடுவனூர் என்பது இந்நாளில் கடுவனூர் என்ற பெயரோடுள்ளது. இது வாகூர்க்குத் தென்மேற்கில் மூன்றுமைல் தொலைவிலுள்ளது. இறைப்புனைச் சேரிக்குக் கிழக்கேயிருந்த காட்டுப்பகுதியைக் காட்டுப்பாக்கம் என்ற ஊர் நினைவு படுத்துகிறது; அதன் வடக்கிருந்த கிரிமாம்பட்டி. இன்றைய கிரிமாம்பாக்கம் ஆதல்கூடும்; இந்நாளைய பின்னாச்சிக்குப்பம், பட்டயத்தில் குறிப்பிட்ட இறைப்புனைச் சேரியாதல் தகும்.