பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
63



பொற்பூ இரண்டில், பொற்பூ ஒன்றினுல் குடிளுைக்கல்லால் நிறைபொன் இருகழஞ்சேமுக்காலே மஞ்சாடியும் ஆறுமா பொற்பூ ஒன்றினுல் மேற்படி கல்லால்......??

இப்பொன்னின் பெரும் பகுதியைக்கொண்டு திருப்பட்டீச் சரம் திருக்கோயில் திருப்பணி செய்யப்பெற்றதென்று செவி வழிச் செய்தியிருப்பதாகத் திருவிசலூர்த் திருக்கோயில் காரிய கர்த்தர் ஒருவர் கூறினுர். -

4 தஞ்சையில் பிச்சதேவர்

தஞ்சைப் பெரிய கோயிலில் ஒலோகமாதேவியார் இராச ராசனது 29-ஆம் ஆட்சியாண்டில் பிச்சதேவர் 18 திருமேனி யை எழுந்தருளுவித்துப் பல அணிகலன்களை அளித்ததாக ஒரு கல்லெழுத்துக் கூறுகிறது.'

"பாதாதி கேசாந்தம் ஒன்றேமுக்காலே இருவிரலரை உசரத்து ரீஹஸ்தம் நாலும் உடைய, இருவிரலே ஒரு தோரை உசரம் உடைய திருவடி நிலையில் எழுந்தருளிப்பலிக்கு எழுந்தருளுகின்ருராகக் கனமாக எழுந்தருளுவித்த பிச்ச தேவர் திருமேனி ஒன்று. இவர் அருகு பலிபாத்ரம் சுமந்து நின்ற 15, விரல் உசரமுடைய கனமாகச் செய்த பூதம் ஒன்று. பூதம் சுமந்த பதிற்றுவிரலகலத்துப் பலி பாத்திரம் ஒன்று. இவரருகு நின்ற பத்தொன்பதிற்றுவிரல் உசரத்துக் கனமாகச் செய்தமான் ஒன்று, ஒரு முழமே பதினெரு விரல் நீளத்து ஐவிால் அகலத்து ஏழுவிரல் உசரத்து ரத்ன நியாசம் செய்து இவர் எழுந்தருளி நின்ற உபபீடம் ஒன்று. தேவரைக் கவித்த தோரணக்கல்லால் இரண்டும் அர்த்த

- o -ഇ- ---

12 கல்வெட்டுச் சிதைந்துளது. 13 பிக்ஷாடனர். 14 34 of Vol II S. I. I. 15. ரத்தினம் பதிக்கப்பெற்று. 16. Two pillars.