பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
623. திருவிசலூரில் இரணியகருப்பம்

இராசராசன் திருவிசலூர்த் திருக்கோயிலில் துலாபார மும் தந்திசக்தி விடங்கியார் இரணியகர்ப்பமும் புகுந்ததாக ஒரு கல்வெட்டறிவிக்கிறது. இக்கோயில் மூலத்தானத்து முன்மண்டபத்து இடதுபுறச்சுவரில் அரசன் அரசியர் உரு வங்கள் சிவலிங்கத்தை வணங்குவது போன்று செதுக்கப் பெற்றுள்ளன. இவ்வுருவங்களின் கீழ் மேற்குறித்த கல் வெட்டிருந்தது.9 திருக்கோயிலே 1932ல் புதுப்பிக்குங்கால் எடுக்கப்பெற்ற இச்சிற்பங்களின்புகைப்படம் இத்திருக்கோயில் அலுவலகத்திலுள்ளது.19 இந்நாளில் ஷை கல்லெழுத்தில்லை. அரசன் அரசி உருவம்மட்டும் செப்பனிடப்பெற்று உள்ளன. (இச்சிற்பங்களை நானும், திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் வித்துவான், திரு. தா. ம. வெள்ஆள வாரணம் அவர்களும் 10-6-57ல் நேரில் சென்று கண்டோம். இச்சிற்பங்களில் ஒன்று இராசராசனேக் குறிக் கும் என்றும் மற்றென்று ஒலோகமாதேவியாரைக் குறிக்கும் என்றும் சொல்லப்பெற்ருேம்). இத்திருக்கோயிலில் ஒலோகமா தேவியார் இரணியகர்ப்பம் புகுந்ததற்குரிய பொன்னின் ஒரு பகுதியைக் கொண்டு திருவலஞ்சுழியில் கூேடித்திரபால தேவர்க்கு இரண்டு பொன்மலர்கள் செய்து அளிக்கப்பெற்ற செய்தி திருவலஞ்சுழியிலுள்ள முதல் இராசராசசோழனின் 29-ஆம் ஆண்டுக்கல்வெட்டுக் கூறுகிறது. '

'திருவிசலூர் மகாதேவர் கோயிலில் நம்பிராட்டியார் ஒலோகமாதேவியார் ஹிரண்யகர்ப்பம் புக்கருளின பொன்னில் 轟 輯 睡 壘 誓 睡 畢 ■ ■ கூேடித்திரபால தேவர்க்குச் சாத்தியருளக் கொடுத்த

8 42 of 1907. 9 K. A. N. Cholas Part I Page 536 footnote. 10 List of Photo negatives of the Madras Presidency

Page 26, No. 417. - - o 11 S. I. I. VIII 237; 633c of 1902.