உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
61



(ii) ஊர்த்தும கேசமும் உட்படத் திருமுடி ஒன்றில்ை பொன் 182 கழஞ்சு.

(iii) 40 கழஞ்சு பொன்னுல் இடைக்கட்டு, மாங்காய், அரசிலை, கள்ளிப்பூ, தகட்டுக்குழை முதலாகிய பல அணி கலன்கள்.

(iv) விமலாதித்த தேவர் தேவியார் குந்தவை நங்கை யார் கொடுத்த திருவரைப்பட்டிகை ஒன்றில்ை தவளைவாய் இரண்டு, படுகண் எட்டு, கள்ளியூஏழு, அரசிலைஒன்று: கொக்குவாய் ஒன்று உட்பட 49 கழஞ்சே முக்காலே மஞ்சாடி யும் இரண்டுமா.

(v) உடையார் நீ ராஜராஜ தேவர் திருமகளார் நடுவில் பிள்ளையார் மாதேவடிகளார். இத்தேவர்க்கே கொடுத்த மினுக்கம் வளையில் இரண்டினுல் பொன் 49 கழஞ்சு ஏழு மஞ்சாடியும் குன்றி; மேற்படியார் வரக்கட்டின பொன் அரைக் கழஞ்சே அரைக்காலினுல் செய்த பொற்பூ ஒன்று

இராசேந்திரன் 1 தொண்டு

முதலாம் இராஜேந்திரன் தான் பட்டம் பெற்றதும் கூேடித்திர பாலதேவர்க்குத் தில பர்வதம் புக்கருளி, கூேடித்திர பாலதேவரை நீ பாதபுஷ்பமட்டித் தொழுது 24க்கழஞ்சில்ை பொற்பூக்கள் பன்னிரண்டு அளித்தார்; இவருடைய தேவி யார் வளவன்மாதேவியார் இட்டபொற்பூ ஒன்று; பொன் முக்காலே நாலுமஞ்சாடி. 7

    • = = - m = * * *

6 பண்டாரத்தார் சோழர் வரலாறு பாகம் பக்கம் 128

அடிக்குறிப்புக் காண்க. 7 S. I. I. Vol. VIII No. 236; 633 B of 1902.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/68&oldid=980736" இலிருந்து மீள்விக்கப்பட்டது