பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் ) 121

பழுதறு பெண்மையோடும்

இளமையும் பழுதின்றேகப் பொழுதொடு நாளும் வாளா

கழிந்தன போலும் என்றாள்' (48)

இராமனது மேனி அழகை யாராலும் எழுத முடியாது என ஒவியர்கட்கு அறை கூவல் விட்டுள்ளாள். தான் முறையாகச் செயல்படும் இயல்பிள்ை என்பதை, செய் தொழில் முறையின் முற்றி என்பதனால் அறியச் செய்கிறாள். திருமணம் ஆகாமையால் தன் பெண்மையும் இளமையும் வீணாகின்றன என்கிறாள். ஒவ்வொரு நாள் பொழுதும் வீணாய்க் கழிகின்றதாம். காலம் பொன் போன்றதாயிற்றே-வீணாய்க் கழியலாமா? ஈண்டு,

“அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிககலம்

பெற்றாள் தமியள் மூத் தற்று' (1007)

என்னும் குறள் ஒப்புநோக்கத் தக்கது. பின்னால், அயோமுகிப் படலத்தில், இலக்குவனிடம் அயோமுகி இவ்வாறு சொல்வதைக் காணலாம். ஆணாயினும் - பெண்ணாயினும், காலத்தோடு திருமணம் செய்து கொள்வது நல்லது என்னும் பொது விதி ஈண்டு எண்ணத்தக்கது. இந்த அடிப்படையில்தான் அரக்கி கூறி ஏமாற்ற முயல்கிறாள்.

அரக்கியின் பொய்ம்மை நிலை ஒரு புறம் கிடப்பதாகுக. இந்தக் காலத்தில் மாப்பிள்ளைக் கழுகுகட்குப் பணத் தீனி போட முடியாமையால், எத்தனையோ அழகிய குல மகளிர், முப்பது - முப்பத்தைந்து அகவை வரையிலுங் கூட தாலி வராமல் குடுபத்துடன் மக்கி மடிந்து கிடப்பது எவ்வளவு கொடுமை! இதற்கு மாற்றுத் தீர்வு என்ன?