பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


128 b ஆரணிய காண்ட ತ್ರಿಯೆಳಿ!

என்னும் பகுதியாலும் அறியலாம். இதைத்தான் கம்பர் சுருங்கக் கூறியுள்ளார். அன்றிலின் நா ஒலியால் அரக்கி தன் வலிமை சோர்ந்து நடுங்குகிறாளாம்.

ஆசை மருந்து

அரக்கிக்குக் குளிர்ந்த பொருளெல்லாம் காமத்தியாய்ச் சுடு நெருப்பாய்ச் சுட்டெரிக்கின்றனவாம். இக் கொடிய வெப்ப நோயால் இறந்து விட வேண்டியவள் ஒரு மருந்தால் உயிர் பிழைத்திருக்கிறாள். இராமனை எப்படியும் அடைய முடியும் என்னும் ஆசைதான் அது:

“ஊழி வெங்கனல் உற்றனள் ஒத்தும் அவ்

ஏழை ஆவி இறந்திலள் என்பரால் ஆழியானை அடைந்தனள் பின்னையும் வாழலாம் என்னும் ஆசை மருந்தினே' (85)

ஊழித் தீயை ஒத்து வெப்புற்றிருந்தாளாம். ஆழியான்

இராமன். அடைந்தனள் என்னும் வினைமுற்றுச் சொல்லுக்கு அடைந்து என வினையெச்சப் பொருள் கொள்ளல் வேண்டும். இதனை இலக்கணத்தில்

"முற்றெச்சம் என்பர். ஆசையால் பல பிணிகள் வருவதுண்டு. ஆனால், இங்கே, உயிர் போக்கக் கூடிய நிலையில் உள்ள காம நோய்க்கு இந்த ஆசை மருந்தாக உள்ளதாம். ‘ஆசை வெட்கம் அறியாது’ என்பது ஒரு பழமொழி, அது எதுவும் செய்யும்.

சூர்ப்பணகையின் செயலைக் கொண்டு ஒரு கருத்துக்குத் தாவலாமா? மக்கள் ஆசையினால்தான் பற்பல செயல்கள்

செய்கின்றனர். ஆனால், ஆசை நற்செயல்கட் குத் தூண்டுகோலாய் இருக்க வேண்டும்; தீய செயல்கட்குத் துணை போகக் கூடாது. ஆசை சிலரை ஆட்டிப்

படைப்பதனால்தான்,