பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் ) 137

ஒப்பாகார் என்று அண்ணனை எண்ணி அரக்கி புலம்பினாள்.

உலகியலில் கூட, என் கால் தூசுக்குச் சமமாக

மாட்டான் - என் செருப்பு அடித் தூசுக்கு ஒப்பாக மாட்டான் என்று கூறும் வழக்காறு உண்டு. அதை ஒட்டிக் கம்பர் இந்தப் பாடலை வடித்துள்ளார்.

இந்த நேரத்தில் இராமன் வந்து, என்ன செய்தி என வினவ, அரக்கி நடந்ததைக் கூறினாள். இராமன் இலக்குவனை வினவ, அவன் இவ்வாறு செய்ததற்கு உரிய காரணத்தைக் கூறினான். அரக்கி இடைமறித்து, தான் சீதையைப் பற்றப் போனதற்கு உரிய காரணம் கூறித் தன் மேல் பிழை இல்லை என வலியுறுத்த லானாள்:

ஒத்தாள் ஒர்படியாள்

பெண் சங்கின் பக்கத்திலே தன் (பெண் தவளையின்) கணவனாகிய ஆண் தவளை இருப்பதைக் கண்டு, தன் கணவன் பெண் சங்கைக் காதலிப்பதாக எண்ணி, சூல் கொண்ட பெண் தவளை ஊடல் கொண்டு ஒலி எழுப்பிக் கலக்கும் நீர்வளம் நிறைந்த நாட்டை உடையவனே (இராமனே)! எந்தப் பெண்ணுக்கும், தன் மாற்றாளைக் கண்டால் உள்ளம் கொதிக்காதா - என்றாள்.

"ஏற்ற வளை வரிசிலையோன்

இயம்பா முன் இகலரக்கி

சேற்ற வளை தன் கணவன்

அருகிருப்பச் சினம் திருகிச்

சூல் தவளை நீர் உழக்கும்

துறை கெழுநீர் வளநாடா

மாற்றவளைக் கண்டக்கால்

அழலாதோ மனம் என்றாள்' (122)