பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 0 ஆரணிய காண்ட ஆய்வு

அரக்கி சொன்னதைக் கேட்டதும் கரன் எழுந்து நின்று சினம் என்னும் நெருப்பைப் பொழிந்தானாம்.

1962ஆம் ஆண்டு மூளைக்கட்டிப் பிணியால் யான் மருத்துவமனையில் சாவுப் படுக்கையில் கிடந்த போழ்து ஒருநாள், மருத்துவச் செவிலியர் இருவர் உரையாடிக் கொண்டிருந்தனர். ஒருவர் மற்றொருவரிடம், "நான் நேத்து சினிமாவுக்குப் பொறப்பட்டேன் - மழை கொளுத்து கொளுத்து என்று கொளுத்திச்சி - அதனால் நின்னிட்டேன்” என்று கூறினார்.

கேட்டுக் கொண்டிருந்த வாயாடித் தமிழ்ப் புலவனாகிய யான், வாளா இராமல், அந்த அம்மையாரை நோக்கி, வெயிலைத்தான் கொளுத்து கொளுத்து என்று கொளுத் திற்று என்று சொல்லவேண்டும்; மழையை, பொழி பொழி என்று பொழிந்தது என்று சொல்லவேண்டும் என்றேன்.

உடனே அந்த அம்மையார், எல்லாம் எனிக்கி தெரியும் - நீ ஒண்ணும் சொல்ல வாண்டாம் - என்று கூறினார். இங்கே கம்பரும் அந்த அம்மையாரைப் போலவே கூறியுள்ளார்; மழைக்குப் பதிலாகக் கனலைக் கூறுகிறார். எரித்த கோபக் கனல் அல்லது கொளுத்திய கோபக்கனல் என்பதற்குப் பதிலாக, பொழிந்த கோபக்கனல் என்று எழுதியுள்ளார்.

மருத்துவச் செவிலியர் கூறவில்லையே - கவிச் சக்கர வர்த்தி கம்பர் கூறி விட்டாரே - எனவே, பொழிந்த” என்பதற்கு மிகுதிப் பொருள் கொள்ளல் வேண்டும் - அதாவது, மிகவும் எரிக்கும் - கொளுத்தும் - கொதிக்கும் கோபக் கனல் எனப் பொருள் கொள்ளல் வேண்டும்.

கரன் வெகுண்டு போருக்குப் புறப்பட்டதைக் கண்ட பட்ைத்தலைவர் பதினால்வரும் தாங்கள் போருக்குப் போவதாகக் கூறினர்,