பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/219

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் 0 217

என்றான். கையில் என்ன என்று கேட்க, கையில் ‘சுண்ணாக்கு' என்றானாம். நாக்கு குழறித் தடுமாறி விட்டது இங்கே,

'உள்ளத்தில் உண்மைஒளி உண்டாயின் வாக்கினிலே

உண்மை ஒளி உண்டாகும்” (22-தமிழ்-4) என்னும் பாரதியார் பாடல் எண்ணத்தக்கது. மற்றும் இராவணன் - பிறர் வந்து விடின் என்னாவது என்ற அச்சத்தால் நடுங்கியிருக்கிறான். ஈண்டு.

'புக்க இடத்து அச்சம் போதரும்போது அச்சம்

துய்க்கும் இடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம் எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ உட்கான் பிறனில் புகல்’ (13) என்னும் நாலடியார்ப் பாடலும் நோக்கத்தக்கது.

ஏகுமின் ஈண்டு

சீதை அவனை உண்மையான தவமுனிவர் என்று நம்பி, ஒரு பவளக்கொடி போல் வந்து, வெல்லப்பாகு போன்ற இனிய சொல்லால் இங்கே வருக என்றாள்:

"பாகுஇயல் கிளவி ஒர் பவளக் கொம்பர் போன்று

ஏகுமின் ஈண்டு என எதிர் வந்து எய்தினாள்” (25)

கிளவி = சொல். கொம்பர் = கொம்பு - அர் - கடைப்போலி. சீதை செந்நிறத்தவளாதலின் சிவந்த பவளக் கொடி உவமையாக்கப்பட்டது.

ஏகுமின் என்றால் செல்லுங்கள் என்பது நேர்ப் பொருள். ஏகுமின் ஈண்டு - இங்கே செல்லுங்கள் என்ற தனால், உள்நோக்கி வருக என்று சொன்னதாகப் பொருள் கொள்ளல் வேண்டும்.

இடத்திற்கு இடம் பேச்சு வழக்கில் மாறுதல் இருக்கும். தென்னார்க்காடு மாவட்டத்துப் பக்கம், வருபவர்களைப்