பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222口 ஆரணிய காண்ட ஆய்வு

வாடைக் காற்றில் அகப்பட்ட பூளைப்பூபோல், என் இருபது தோள்களின் வாடையால் அழியப் போவதைக் காண்க என்றான்:

‘'தேறுதி நாளையே அவ்விருபது திண்தோள் வாடை வீறிய பொழுது பூளைவீ.என விவன் அன்றே” (6.1) பூளை என்பது பஞ்சு போன்ற அமைப்புடைய ஒரு மெல்லிய பூ. காற்றடித்தாலே அது பறந்து போய்விடும். பழுத்த பஞ்சுக் காயே வெடித்ததும் பஞ்சு காற்றில் பறந்து ஒடி விடுவதைக் காணலாம். அதனினும் மெல்லியது பூளை. இராவணனின் இருபது தோள்களின் வாடை பட்டாலேயே காற்று முன் பூளைபோல் இராமன் இறந்து படுவானாம்.

இந்த ஒப்புமை பலராலும் சொல்லப்படுவதே. திரு மங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழியில்,

“காற்றிடைப் பூளை கரந்தென அரங்தை உறக் கடல் அரக்கர் சேனை கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த

கோல வில் இராமன்” (4:10:6) எனக் கூறப்பட்டுள்ளது. இராமன் வில்லால் அரக்கர்கள் பூளைப் பூப்போல் அழிந்தார்களாம். இங்கே இராமன் அழிவான் என இராவணன் கூறியுள்ளான்.

மேலும் கூறுகிறான்:

‘மேருவைப் பறிக்க வேண்டின்,

விண்ணினை இடிக்க வேண்டின், நீரினைக் கலக்க வேண்டின்,

நெருப்பினை அவிக்க வேண்டின், பாரினை எடுக்க வேண்டின்,

பலவினை சிலசொல் ஏழாய் யார்எனக் கருதிச் சொன்னாய்

இராவணற்கு அரிதுஎன்? என்றான்” (62)