பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 0 233

விலைமாதர் வீட்டிற்குச் சென்ற ஏழையும், இனிய பார்வையின்றிக் கடுகடுத்துப் பார்ப்பவரின் வீட்டிற்குச் சென்ற விருந்தினரும், தவ முனிவரைக் காம எண்ணத்துடன் நோக்கும் தரங்கெட்ட பெண்டிரின் காமநோக்கும் மீள்வது போல் வேல் மீண்டதாம்:

'பொன் நோக்கியர்தம் புலன்நோக்கிய புன்கணோரும்

இன்நோக்கியர் இல்வழி எய்தியகல் விருந்தும் தன்நோக்கிய நெஞ்சுடை யோகியர்தம்மைச் சார்ந்த மென்நோக்கியர் நோக்கமும் ஆம்என மீண்டது

அவ்வேல்' (119) பொன் நோக்கியர் = பொருளையே விரும்பும் விலை மாதர். இவர்களை வள்ளுவர் பொருள் விழையும் ஆய்தொடியார் (911) என்றும், பொருள் பெண்டிர் (913) எனவும் குறிப்பிட்டுள்ளார்.

புலன் நோக்குதல் = மாதரிடம் ஐம்புல இன்பத்தை நுகர விரும்புதல். ஐம்புல இன்பமும் அவர்கள் வாயிலாகப் பெறமுடியும் என்பதனை,

'கண்டு கேட்டுஉண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள’ (1101)

என்னும் குறட்பாவாலும் அறியலாம்.

புன்கணோர் = பொருள் இல்லாமையால் எளிய நோக்கினராய் - எளிய தோற்றத்தினராய் உள்ள வறியவர். வறியவன் ஒருவன் பொருளின்றிப் பொருட் பெண்டிர் வீட்டிற்குச் செல்லின், வரவேற்பின்றித் திரும்ப வேண்டியது தான். வள்ளுவராவது பொருள் நோக்கம் உடையவர் என்றார்; உலோகத்தாலோ வேறு எதாலோ ஆன நாணயத்தைக் குறிப்பிடாமல் பொன்னை - பொன் கட்டியை விரும்புபவர் எனக் கம்பூர் மேலே சென்றுவிட்டார்.