பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/240

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


238 r, ஆரணிய காண்ட ஆய்வு

முந்தே தடுக்க, ஒழியா தெடுத்த

வினையேன் முடித்த முடிவால்

அந்தோ கெடுத்தது எனஉன்னி உன்னி

அழியாத உள்ளம் அழிவான்" (156)

சிந்தாகுலம் = மனத் துயர், இராமன் தன் குற்றத்தை ஒத்துக் கொண்டது உயரிய பண்பாகும். சீதை முன்பே தன் இரு குற்றங்களையும் ஒத்துக் கொண்டாள். ஒன்று மானைப் பிடித்துத் தரக் கேட்டது - மற்றொன்று இலக்குவனை அனுப்பியது. இவர்களுள் குற்றம் இலாதவன் இலக்குவனே.

பின்னர் இருவரும் சோலையினூடு புக்கு நோக்கிய போது குடிலோடு அங்கே சீதையைக் காணவில்லை.

கூடு கண்டிலது

கூட்டை விட்டுப் பிரிந்து சென்ற ஓர் உயிர், மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது, கூட்டைக் காணவில்லை யெனின் அவ்வுயிர் எவ்வாறு திகைக்குமோ அவ்வாறு தேடி வந்த இராமன் திகைத்து நின்றான்:

'ஓடி வந்தனன் சாலையின் சோலையின் உதவும்

தோடு இவர்ந்த பூஞ்சுரி குழலாள் தனைக் காணான் கூடு தன்னுடையது பிரிந்தா ருயிர் குறியா தேடி வந்து அதுகண்டிலதாம் என கின்றான்” (158) இராமன் உயிராம் - சீதை கூடாம். கூடு என்றால் உடம்பு என்றே கொள்வோமே! உடம்பைப் பிரித்து வைத்துவிட்டுச் சென்ற உயிர் மீண்டும் வந்து உடலைத் தேடிய போது காணவில்லை.

கூடு விட்டுக் கூடு பாயும் சித்துச் செயலில், உயிர் கூடாகிய உடம்பைப் பிரித்து ஒரிடத்தில் வைத்துவிட்டு வேறிடம் சென்று மீண்டும் திரும்பி வந்து வைத்துவிட்டுப் போன அந்தக் கூட்டிற்குள் புகுந்து கொள்ளுமாம், இது