பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/241

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் 239

ஒரு சித்துக் கலை. இதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் காண்பாம்:

ஒன்று:- கைலையிலிருந்து யோகி ஒருவர் மண்ணுலகு அடைந்து தமிழ்நாட்டுத் திருப்பதிகளை வணங்கிக்கொண்டு சென்றார். காவிரிக் கரையிலுள்ள சாத்தனூர் என்ற ஊரில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூலன் என்னும் ஆயன் திடீர் என இறந்துவிட, ஆனிரைகள் கதறின. அதைக் கண்ட யோகி, தன் உயிரை மூலன் உடம்பில் புகுத்தி, தன் உடலை ஒரிடத்தில் மறைத்து வைத்துவிட்டு, ஆனிரைகளை மந்தையிலிருந்து ஊர் கொண்டு போய்ச் சேர்த்தார். பின் தன் உடலை வந்து பார்த்தபோது, அவர் இங்கிருந்தே தொண்டு செய்ய வேண்டும் என்பதற்காகச் சிவன் அவர் உடலை மறைத்து விட்டாராம். பிறகு மூலன் உடம்போடே திருமூலர் என்னும் பெயருடன் திருமந்திரம் இயற்றினார். இஃது ஒரு கூடு விட்டுக் கூடு பாய்ந்த கதை.

இரண்டாவது:- திருவண்ணாமலையில் அருணகிரி நாதர் பிரபுதேவன் என்னும் மன்னனுக்குக் கண்ணொளி பெறச் செய்யும் ஒரு மலரைக் கொண்டு வருவதற்காகத் தன் உடலை மறைத்து வைத்துவிட்டு, இறந்து கிடந்த ஒரு கிளியின் உடலில் தன் உயிரைப் பாயச் செய்து பறந்து சென்று மலரினைக் கொண்டு வந்து கொடுத்தார். அவரது பகைவனாகிய சம்பந்தாண்டான் என்பவன் அவரது உடலை அழித்து விட்டான், பிறகு அவர் கிளி உருவோடே இருந்தாராம்.

யோகி திருமூலருக்கும் அருணகிரிநாதருக்கும் தம் உடல் காணாத போது எவ்வளவு துயரம் ஏற்பட்டிருக்குமோ. அதுபோன்ற அளவு துயரம், தன் உயிர்க்கு உடல்போல் இருந்த சீதையைக் காணாதபோது இராமருக்கு ஏற்பட்ட

தா.ம.