பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 39

அளவிட முடியாத ஒளியாகிய கையினால் - என்பது முதலடியின் கருத்து. கரம் - கை. உறை = மேல் உறை - போர்வை. தோலை உரிப்பதுபோல் இருளாகிய போர்வையை உரித்தானாம். கதிராகிய கையால் தாமரை மலர்களின் இதழ்களைத் திறந்தான் எனவும் புலவர்கள் கூறியுள்ளனர்: ஞாயிறு தோன்றின் தாமரை மலரு மன்றோ?

இருவேறு உழவர்கள்

முனிவன் தன் மனைவியுடன் தீக் குளிக்க விரும்புவ தாக இராமனிடம் கூறினான். அதற்கு இராமன், தீக் குளிப்பதற்கு உரிய காரணம் என்ன என வினவினான்: 'வரிசிலை உழவனும் மறை உழவன்ை நீ

புரிதொழில் எனையது புகலுதி எனலும்' (38)

என்பது பாடல் பகுதி.

வரி சிலை உழவன் = வில் ஏந்திய இராமன். மறை உழவன் = மறை (வேதம்) ஒதும் முனிவன். வாள் உழவர் - வில் உழவர் என்னும் ஆட்சிகளைக் கம்பர் வேறிடத்தும் கூறியுள்ளார். சிலை உழவு = வில் போர். மறை உழவு = சொல் போர். ஈண்டு,

"வில்ஏர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

சொல்ஏர் உழவர் பகை' (872)

என்னும் திருக்குறள் ஆட்சிகள் ஒப்பு நோக்கத் தக்கன.

இதனைச் சிவப்பிரகாச அடிகளார் மிகவும் தெளிவாகப் பிரபுலிங்க லீலையில் கூறியுள்ளார்:

"சொல்போர் புரிவா நான்மறை

ஆறங்கம் உணர்ந்த தொழுகுலத்தோர் வில்போர் புரிவர் நெடியசிலை

இராமன் அனைய விறல்வேந்தர்” (3:15)