பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44 ) ஆரணிய காண்ட ஆய்வு

பசு மீண்டும் கன்றைக் காக்க வரின், தாயைக் கண்டதும்

கன்று மகிழ்வது போல, இராமனைக் கண்டதும் முனிவர்கள்

உவகை உற்றனராம்.

'ஆய்வரும் பெருவலி அரக்கர் நாமமே வாய்வெரீஇ அலமரும் மறுக்கம் நீங்கினார் தீவரு வனத்திடை இட்டுத் தீர்ந்ததோர் தாய்வர நோக்கிய கன்றின் தன்மையார்” (5)

தீ அரக்கர்கள் - தாய்ப்பசு இராமன்-கன்று முனிவர்கள். திருடன் திருடன் என்று கூவுவது போல், அரக்கர் - அரக்கர் என்று முனிவர்கள் பிதற்றுவர் போலும்.

3) தம்மைச் காத்துக் கொள்ளமுடியாத அளவுக்குக் கடுந்தொழில் புரியும் அரக்கர் தம்மை வருத்துதலால், அவர்களோடு போர் புரியவும் இயலாமல் உள்ளம் புழுங்கிச் சோர்ந்து துன்பக் கடலில் ஆழ்ந்து கொண்டிருந்த தவமுனிவர்கள், இராமனைக் கண்டதும் ஒரு மரக்கப்பல் பெற்றது போல் மயக்கம் நீங்கினர்:

"கரக்கரும் கடுந் தொழில் அரக்கர் காய்தலின் பொரற்கு இடமின்மையின் புழுங்கிச் சோருநர் அரக்கர் என் கடலிடை ஆழ்கின்றார் ஒரு மரக்கலம் பெற்றென மறுக்கம் ங்ேகினார்” (6) அரக்கர்கள் ஆழ்கடல் ஆழ்கடலில் அமிழ்பவர்கள் தவ முனிவர்; மரக்கலம் = இராமன். இராமனாகிய மரக் கலத்தின் உதவியால் அரக்கராகிய கடலைக் கடந்து கரையேறி வீடு பெறுபவர் என்னும் கருத்து,

பிறவிப் பெருங்கடல் ந்ேதுவர் ந்ேதார் இறைவன்அடி சேரா தார்" (10) என்னும் குறளை நினைவுறுத்துகின்றது.