பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர &drg೫67ff о 45

4) செய்த தவமும் பேரறிவும் (ஞானமும்) கை கொடுத்து உதவ, பிறவியாகிய சிறையிலிருந்து விடுதலை பெற்றவர்களைப் போல இராமனை உணர்வுடன் நோக்கி ஆறுதல் பெற்றனர்.

"தெரிஞ்சுற நோக்கினர் செய்த செய்தவம்

அருஞ்சிறப்பு உதவ நல்லறிவு கைதர

விரிஞ்சுறப் பற்றிய பிறவி வெம்துயர்ப்

பெருஞ்சிறை வீடுபெற் றனைய பெற்றியார்” (7)

தெரிந்து விரிந்து என்பவற்றைத் தெரிஞ்சு, விரிஞ்சு எனக் கொச்சையாகப் பேசுவது உலக வழக்கில் உண்டு. இந்த அமைப்பு செய்யுளில் இடம் பெறின், இதற்குப் போலி என்னும் பெயர் சூட்டி அமைதி செய்வர் இலக்கண நூலார்,

மேலே இடம் பெற்றுள்ள நான்கு உவமைகளும் ஒன்றின் ஒன்று உயர்வாய் உள்ளன. முன் இரண்டும் அஃறிணை - பின் இரண்டும் உயர்திணை. முதல் இரண்டிலும் முன்னது. இயங்காமல் ஒரே இடத்தில் இருக்கும் மர இனம் (தாவரம்) ஆகும்; பின்னது, இடம் மாறி இடம் இயங்கக் கூடியது. முன்னது ஒரறிவு உடையது எனப்படுவது. பின்னது ஐயறிவு உடையது எனப்படுவது. பின் இரண்டில் முன் உவமை, கடலிடை மரக்கலம் பெற்றவர்; பின் உவமை பிறவிச் சிறையினின்றும் விடுதலை பெற்று வீடுபேறு எய்தும் பெற்றியர்.

ஒரே நிலைக்கு நான்கு உவமைகள் கூறப்பட்டுள்ளன. இராமனைக் கண்டதும் முனிவர்கள் அடைந்த 5côrestibl$ 5cm.é, (pop67 (Cape of good hope) l 114 úLuiglu Irrg, மேன்மேலும் உறுதி பெற்று உவகை மலரச் செய்ததை நான்கு உவமைகளால் நயம்பெற விளக்கியுள்ளார் கம்பர்.