பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


60 0 ஆரணிய காண்ட ஆய்வு

'தொண்டர் காதனைத் தூதிடை

விடுத்ததும் முதலை உண்ட பாலனை அழைத்ததும் எலும்பு பெண்ணுருவாக் கண்டதும் மறைக் கதவினைத்

திறந்ததும் கன்னித் தண்தமிழ்ச் சொலோ மறுபுலச்

சொற்களோ சாற்றீர்' (58) என்று பாடித் தமது தமிழ் உணர்வுத் தினவைத் தீர்த்துக் கொண்டார். இப்படியே போனால் இந்தப் பட்டியல் மிகவும் நீளும்,

சிவன் அகத்தியர்க்குத் தமிழ் தந்த செய்தி, காஞ்சிப் புராணத்தில்.

'வடமொழியைப் பாணினுக்கு வகுத்தருளி

அதற்கு இணையாத் தொடர்புடைய தென்மொழியை

உலகமெலாம் த்ொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார்

கொல்லேற்றுப் பாகர்' எனக் கூறப்பட்டுள்ளது. குடமுனியை உலகம் எல்லாம் தொழுது ஏத்துவது எதற்காக? நீண்ட தமிழை உலகம் முழுவதற்கும் தந்ததனால் என்க.

என்றும் உளது - இசை தருவது

தமிழால் அகத்தியன் புகழ் பெற்றுள்ளமையைக் கம்பர் மற்றொரு பாடலாலும் அறிவித்துள்ளார். அகத்தியனின் அடிகளை இராமன் வணங்கினானாம். அகத்தியன் மகிழ்ச்சிக் கண்ணிர் - உணர்ச்சிக் கண்ணிர் பெருக இராமனைத் தழுவிக்

கொண்டு, நும்வரவு நல்வரவாகுக என்று பல நயமொழி புகன்றானாம். பாடல்.