பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் 19

கழுவும் அளவுக்குக் கண்ணிர் விட்டனர் என்பது அவர்களின் துயர மிகுதியைக் காட்டுகின்றது. தந்தையின் நண்பன் ஆயிற்றே!

மூன்றுக்கு மூன்று

தயரதனை எண்ணிச் சடாயு புலம்புகின்றான். முப்பொருள்கள் மகிழவும் முப்பொருள்கள் வருந்தவும் இறந்துவிட்டாயே என்கிறான்.

எதைக் கேட்கினும் தருகின்ற கற்பக மரத்தைவிட, தயரதன் மிகுதியாக வழங்குவானாம்; அதனால் தயரதனது கொடைக்குக் கற்பகம் தோற்று வருந்தியிருந்தது. தேய்வதும் நடுவில் களங்கம் உடையதுமாகிய திங்கள், அவ்வாறு குறையின்றி வெண்மையாய் விளங்கிய தயரதனின் குடைக்குத் தோற்று வருந்தியிருந்ததாம்.

தோண்டினாலும் பொறுக்கும் நிலம் (பூமி), தயரதனின் பொறுமைப் பண்புக்குத் தோற்று வருந்தியதாம். இப்போது தயரதன் இறந்து விட்டதால், அவனுடைய கொடை மீதும் குடை மீதும் பொறுமை மீதும் பொறாமை கொண்டிருந்த கற்பக மரமும், திங்களும், நிலமும் மகிழ்கின்றனவாம்.

அதே நேரத்தில், இரவலர்களும் நல்லறமும் சடாயுவும் வருந்தும்படி நேரிட்டதாம்.

பரவலரும் கொடைக்கும் கின்றன் பனிக்குடைக்கும்

பொறைக்கும் நெடும்பண்பு தோற்ற கரவலரும் கற்பகமும் உடுபதிரும் கடலிடமும்

களித்து வாழப் புரவலர்தம் புரவலனே பொய்ப் பகையே

மெய்க்கு அணியே புகழின் வாழ்வே இரவலரும் நல்லறமும் யானும் இனி

என்பட கீத்து ஏகினாயே" (21)