பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியற் கட்சிகள் வேற்ற முடியாத வாக்குறுதிகளைத் தேர்தல் பிரசார காலத் தில் கட்சித் தலைவர்கள்கூடத் தாராளமாக அள்ளி இறைத்து விடுகிருர்கள். ஜனநாயக அரசுகளுக்குள் அமெரிக்க ஐக்கிய காடுகளில் தான் அரசியற் கட்சிகள் திறமையுடனும் அதிக விரிவுட னும் அமைக்கப் பெற்று அபிவிருத்தி 懿 அடைந்திருக்கின்றன. வெகு காலமாக ಸಿ; அங்கே கட்சிகள் மிக்க அதிகாரம் செலுத்தி அனுபவம் வருகின்றன. ஆதலால் கட்சி ஆட்சியின் கெடுதல்கள் அதிகமாகவும் தெளிவாகவும் அங்கே காணப்படுகின்றன. சட்டப்படி ஏற்படுத்தப் படாத அரசியல் ஸ்தாபனங்க ள்கையால் அமெரிக்க அரசியற் கட்சிகள் நுணுக்கமான ஏற்பாடுகளுடன் பொறுப் பில்லாத முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. கட்சிக் கும் கட்சித் தலைவருக்கும் அளவிலாச் செல்வாக்கு ஏற்பட் டிருக்கிறது. கட்சித் தலைவர்கள் மனச் சாட்சியின்படி நடவாதவர்களாய் இருப்பார்களாயின் பொதுமக்களின் நிலைமைக்குக் கொடிய தீமைகள் விளையும். கட்சிகளின் மூலதனத்திற்கு இரகசியமாக ஏராளமான பொருள் உதவி செய்துவரும் தொழில் முதலாளிகளுக்கும், ஆலே முதலாளி களுக்கும், பெரிய வியாபாரச் சங்கங்களுக்கும் விசேஷச் சலுகைகள் ஏற்பட்டு விடுகின்றன. இவ்விதமான சலுகை கள் பொதுமக்களின் கலத்துக்குப் பெரிதும் ஊறு செய்கின் றன. இத்தகைய ஊழல்களையும் குறைகளையும் ஒருவாறு நீக்கச் சில பிரமுகர்கள் சட்ட மூலமான முயற்சிகளைச் செய்து வருகிருர்கள். கட்சிகளின் மூலநிதிகளைப்பற்றிய விரிவான வாக்குமூலங்களும் உறுதிகளும் தேர்தல்களில் ஏற்படும் வரவு செலவுக் கணக்குகளும் அப்போதைக்கப் போது சர்க்காருக்கு அனுப்பப்படவேண்டும் என்ற நிர்ப்பந்த மும், இதைப் போன்ற மற்ற விதிகளும் அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. என்ருலும் இவையெல்லாம் கட்சி ஏற்பாட்டின் சூழ்ச்சிகளையும் தீமைகளேயும் வேர்ற அழித்துவிடக் கூடியனவாக இல்லை. .ெ