பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசின் சர்வாதிகாரம் பப்படி சட்டங்களே ஏற்படுத்தும் இத்தகைய நிச்சயமான வழி பொது மக்கள் கையில் இருக்கிறது. இவ்வகையில் பொதுமக்களின் அதிகாரம் பார்லிமெண்டையும் கட்டுப் படுத்துகிறது. ஆகையால் ஒரு விதத்தில், சட்டப்படி ஏற் படுத்தப்பட்ட சர்வாதிகாரி அரசியல் சர்வாதிகாரம் வகிக்கும் வாக்காளர்களால் நியமனம் செய்யப்படக் கூடியவரே ஆவர். ஜன சம்மதத்தை அடிப்படையாகக் கொண்டோ, பலாத்காரத்தைத் துணயாழ்ப் பெற்ருே, இவ்விரண்டன் சார்பையும் அடைந்தோ, சர்வாதிகாரமானது உலகிலுள்ள அரசுகளில் நிலவி வருகின்றது. பணிந்து நடக்க வேண்டு மென்ற கட்டாயத்தினலோ, பணிந்து நடப்பதால் நன்மை உண்டென்ற நம்பிக்கையினலோ ஜனங்கள் அரசுக்குப் பணிக்தொழுகுகின்றனர். ஜனநாயக ஆட்சியில், அரசுக்குப் பணிந்து நடப்பதால் உண்டாகும் அநுகூலங்களே ஜனங்க ளெல்லாம் நன்கு அறிந்திருக்கிருர்கள். இதல்ை அடங்காப் பிடாரிகளான சிலரை அடக்கும் அளவில் மாத்திரமே பலப் பிரயோகம் வேண்டியிருக்கிறது. கொடுங்கோலரசிலோ குடிகள் பயமொன்றினலேயே அரசுக்குப் பணிந்து கிடக் கின்றனர். - ‘. . . . . சட்டப்படி ஏற்பட்டுள்ள சர்வாதிகாரிக்கும் அரசியல் சர்வாதிகாரம் வகிப்பவர்களுக்கும் இடையே உள்ள உறவு நன்கு அமைந்திருந்தால் ஆட்சியும் நல்ல ஆட்சியாக இருக் கும். அரசியல் சர்வாதிகாரி நேரடியாகக் காரியங்கள் செய் தல் கூடாது. அவருடைய இஷ்டம் சட்டப்படி ஏற்படுத்தப் புெற்ற சர்வாதிகாரியின் கட்டளைகள் மூலமாகவே வெளி யாக வேண்டும்; பொதுஜனங்களுக்குத் திருப்திகரமான முறையில் சட்டங்கள் அமைய வேண்டும். ' . . . . மேற்கூறிய ஒருதலைப்பட்ட சர்வாதிகாரக் கொள்கை யைப் பல காரணங்களால் எதிர்ப்பவர் பலர். ஜனங்கள் ஒன்றுகூடி அமைத்திருக்கும்.மதஸ்தாபனம், தொழிற் சங்கம் முதலிய சமூகக் குழுக்களும், பொருளாதார சம்பந்தமான சங்கங்களும் அரசைப்போன்றே முக்கியமானவை. அவை அரசுக்குச் சமானமாகவும், சில திறத்தில் அதற்கு மேலாக