அரசின் சர்வாதிகாரம் தாக்கிக் கண்டிப்பதில் ஓரளவு நியாயம் இருக்கிறதென்பதை காம் ஒப்புக்கொள்ள வேண்டும், அதனல் அக்கொள்கையை முழுதும் விலக்கிவிட இயலாது. தனித்தனியான அரசுகளுக் குள்ளே ஏற்படும் பரஸ்பர விரோதங்களேச் சமரஸ்ப் படுத்தித் தீர்த்து வைக்க ஒரு தலைமையான அதிகாரஸ்தா பனம் இன்றியமையாததாகும். அவ்வதிகார ஸ்தாபனமே அரசின் தனியாணையை வெளியிடுவதாக இருக்க வேண்டும். வெளிநாட்டு விஷயங்களில் முழுச் சுயேச்சையும் சர் வாதிகாரமும் படைத்த அரசின் லகதியத்திற்கும் மானிட - வர்க்கத்தின் rேமிலாப அபிவிருத்திக்கும் பரஸ்பர விரோதம் ஏற்படுவது இயல் - பன்ருே என்ற கேள்வி எழலாம். உலக மெங்கும் நாகரிகம் பரவி வரும் இங்காளில் தேசங்கள் தனித்து கிற்கும் நிலையை விட்டு ஒன்றையொன்று நாடி யிருக்கும் நிலையைப்பெற்றிருத்தல் யாவரும் நன்கறிந்த விஷ யமே. இனிமேல் உலகமனைத்துக்கும் பொதுவான ஆட்சி ஒன்று வேண்டுமென்றும், அவ்வாட்சியின்கீழ் யாவரும் பணிந்தொழுக வேண்டுமென்றும் எண்ணும் உயர்ந்த கோக் கத்தை நாம் விருத்தி செய்ய வேண்டும். பணிந்து நடத்த லென்பது நம் கடமை; அது நம்முடன் வாழும் மானிட வர்க்கத்தினர் அனைவருடைய நலத்திற்கும் காரணமாகும். பலர் இக்கொள்கை வீண் மனக்கோட்டை யென்றும் காரிய சாத்தியமற்ற லகதியமென்றும் கருதுதல் கூடும். மனித சமூகத்தினருக்குரிய சிறந்த லசுழியம் இதுவே யென்று சொல்ல வேண்டும். இதற்கான முயற்சிகளைச் செய்து இத் தகைய நிலையை உண்டுபண்ணுவது செயத்தக்க பெருஞ் செயலாகும். சர்வதேச சங்கம் இந்தக் கொள்கையையே தன்னுடைய லகதியமாகக்கொண்டு உழைத்தது. ஆனல் ...' . . . o.o. படுத்தி உலகமனைத்தும் விரிந்து உலக அரசு. சர்வதேச சங்கம்
பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/45
Appearance