பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- சுயேச்சையும் சம த்துவமும் மாயிருப்பின், அவை பொதுமக்கள் நிர்ப்பந்தங்களுக்கு ஆளாக்கும். அத்தகைய நிலையில் அரசியல் துறையில் சுயேச். சையே இருக்க முடியாது. எனவே விரிவடைந்த சமத்து வத்திற்கும் சுயேச்சைக்கும் விரோதமே இல்லை; அன்றியும். சமத்துவம் விடுதலே லகதியத்தை அடைய இன்றியமையாத சாதனமும் ஆகும். உண்மைச் சமத்துவம் சுதந்திரத்தின் ஒரு பகுதியே. பிரஜைகளுடைய சொத்து, செல்வாக்கு, பதவி இவை போன்ற விஷயங்களில் ஒருவிதமான வித்தியா சமும் ஏற்படலாக்ாது என்பதும், சமத்துவக்கொள்கையை "ஒவ்வோர் அரசும் அங்கீகரித்து அதற்கேற்ப கடந்துவர வேண்டுமென்பதும்.இக்காலத்து ஜனங்களின் முக்கிய விருப் பமாக இருக்கின்றன. அதிகாரத்தையும், கேஷ்ம லாபங்களே, யும் பகிர்ந்து கொள்வதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதியே கிடைக்கவேண்டும். அந்தக் குறிப் பிட்ட பகுதிக்குமேல் யாரும் பெறக்கூடாது. வயது வந்த ஒவ்வொருவனும் பிரஜா உரிமைகளையும் சலுகைகளையும் அதிகாரங்களையும் பெற இடம் இருக்கவேண்டும். பதவி, சொத்து, மதம், ஆண், பெண் என்ற விஷயங்களிலுள்ள வித்தியாசம் காரணமாக ஒரு பிரஜைக்கு எந்த விஷயத்திலும் தடை இருக்கக் கூடாது. பிரஜைகள் யாவரையும். ஒரேவிதமாக நடத்தவேண்டு. மென்பது சம உரிமையின் பொருள் அன்று. சமூக முன் னேற்றத் துறைகளில் பலருக்குப் பலவிதத் திறமை இருக் கும். மனிதர்களுக்கு இயல்பாக உள்ள அறிவாற்றல்களும் ஒரே மாதிரி இரா. ஆகையால் ஒவ்வொரு மனிதனும் தன் ಆn '೬fಣIDSಿ; உட்கருத்து அறிவுத்திறத்திற்கும் உடல் வலிமைக்கும் தக்கவாறு அபி விருத்தி அடைவதற்குரிய வசதிகள் பெறவேண்டும். பிர ஜைகள் மேலும் மேலும் தங்கள் தங்கள் அபிவிருத்திக்குரிய சந்தர்ப்பங்களையும், வசதிகளையும் பெறும்படி, அரசானது நடுநிலையில் நின்று அமைத்தால் அதுவே சம உரிமை தருவ தாகும். பிறருடைய பிரயோஜனத்திற்காக ஒரு தனி மனித