பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

திருப்பெயர் சூடிச் சீன நாட்டுக்குச் சென்ற €ಾ ஜூேன் என்று வழங்கும் தியான நெறியைப் பரப்பினர்."

...உலகப் பண்பாட்டுக்குத் திராவிடம் வழங்கிய தனிச் சிறப்புவாய்ந்த கொடை திராவிட மொழியே ஆகும். ஒரு சில விதி விலக்குகள் நீங்கலாக உலகில் உள்ள ஒட்டியல் மொழிகள் அனைத்தும் பழந்தமிழையே தலைமை வாய்ந்த தாயூற்ருகக் கருதுகின்றன. அதனுல திராவிடத்தின் தொண்டு பேச்சுற்றவர்களுக்குப் பேச் சாற்றல் வழங்கிய பெருந்தொண்டு என்று கூறலா ஒல்லவா?’’’

“. . . . . . இதுகாறும் கூறியவை என்னதான் மேற்போக் கான ஆராய்ச்சியாயினும், அதுவேயுங்கூடத் தென் னிந்தியப் பண்பாட்டின் அடிப்படை ஒருமையை வலி யுறுத்தும் வல்லமை மிக்க சான்ருகும். காலந்தோறும் விரிந்து பரந்து வந்துள்ள அதன் வரலாறு இடையீடின்றி உள்ளது. அயலகப் பண்பாடுகளில் சிறந்தன அனத்தை யும் அது தன் வயமாக்கிக்கொண்ட போதிலும், தன் தனித்தன்மை நிறைந்த உயிராற்றலை இழக்காமலே இன் னும் இருக்கிறது. பழங்கால, நடுக்கால, இக் கால உலகில் அதன் இடம் தனிச்சிறப்பும் கவர்ச்சியும் வாய்ந்தது. பழைய உலகத்தைத் தன் கலைகளாலும் தொழில்களா லும் சமயத்தாலும் மொழியாலும் அது நாகரீக ஒளி பெறச்செய்தது. பண்பாடாம் கைவிளக்கின் சுட ரொளியை அது எங்கணும் பரப்பியது. மத்திய காலத்தில் படையெடுப்புக்களையும் செய்தது. இன்றுகூடத் தமிழன் தொழிலாளியாகவோ, அலுவலாளனுகவோ உலகின்

22. Origin and spread of the Tamils. V. R. R. Dikshitar

- pp. 37

23. தி : *严 pp. 39