பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

贾毒莎 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

முண்டிலேதான். கா. க.அ-ஆம் நூற்ருண்டுகளில் தமிழ் வசன நூல்கள் அதிகமாக ஏற்படவில்லை. கருஎஎ முதல் வசன நூல் உண்டானதற்குப் பிறகு இருநூறு ஆண்டுகள் வரையிலும் தமிழ் வசனம் வளர்ச்சி பெருமலே குன்றி யிருந்தது. சென்ற க-ைஆம் நூற்ருண்டிலேதான் தமிழ் வசன நூல்கள் ஏராளமாக வெளிப்படத் தொடங்கின.' ஆராய்ச்சி அறிஞர் மயிலை. சீனி.வேங்கடசாமி அவர்கள் கூறுமாறு, வீரமாமுனிவரைத் தமிழ் உரை நடையின் தந்தை' என்று கூற இயலாது. ஆயினும், இன்று நமக்குக் கிடைக்கும் பாதிரிமார் படைப்புக்களைக் கொண்டு பார்க்கும்போது, வீரமாமுனிவர் இயற்றிய வேதியர் ஒழுக்கம் கட்டுரைக் கலக்குச் சிறந்த வழிகாட்டி யாப் அமைந்துள்ள திறம் புவஞகும். இருபது அதிகாரங் களையும், எட்டுச் சோதனைகளையும், நூற்றுத் தொண் ணுறு பக்கங்களையும் கொண்ட வேதியர் ஒழுக்க”த்தின் பாயிரம் வருமாறு:

'மேற்குல மனிதர்க்குரிய ஆறு தொழில்களில் வேதத் தைப் போதித்தல் ஒன்ருகையில் மேற்குலத்தோரை வேதியர் என்பார். ஆயினும் இப்பெயர் தொழிற்பெய ரானபடியால் அந்தத் தொழிலைச் செய்பவர் யாவரும் எக்குவத்திற் பிறந்தாராயினும் வேதியரென்னப்படுவது நியாயமாமே ஆகையால், வேதத்தைப் போதிக்குங் குருக்களும் இவர்களிடமாக வேதஉணர்ச்சிகளைச் சொல்ல அனுப்பப்பட்ட உபதேசிகளும் வேதியர் எனப்படுவார் கள். இது மெய்யாயினும், வேதியர் ஒழுக்கம் என்னும் இப்புத்தகத்தை நாம் எழுதத் துணிந்தபோது வேதியர் என்னும் பெயராற் குருக்களைக் குறித்தோம் என்று நிகணக்கவேண்டாம். காரணம் குருக்கள் யாவரும் பொன்

37. வேதியர் ஒழுக்கம் (1888), பக், 8-10,