பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

தொரு சான்றை அடிகளார் ஆக்கிய முல்லைப் பாட்டு ஆராய்ச்சி என்னும் இற்றைநாள் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகட்கு முன்னேடியாய் விளங்கும் எழுத்தோவியத் தினின்றும் காணலாம். அவ்வெழுத்தோவியத்திலேதான் எத்தனை எத்தனை எழில் ஒவியங்கள்! அப்பகுதி வருமாறு: "இன்னும் எங்கெங்கு நம்அறிவைத் தம்வயப்படுத்து கின்ற பேரழகும் பேரொளியும் பெருந்தன்மையும் விளங்கித் தோன்றுகின்றனவோ, அங்கெல்லாம் பாட்டு உண்டென்றே அறிதல் வேண்டும். இதனை விளக்கிக் காட்டுமிடத்துப் பேரழகாற் சிறந்த ஒர் அரசிதான் மேற் போர்த்திருந்த நீலப்பட்டு ஆடையினைச் சிறிது சிறிதாக நீக்கிப், பின் அதனைச் சுருட்டிக் கீழே எறிந்துவிட்டுத் துயில் ஒழிந்து, ஒளி விளங்கு தன் தனிமுகம் காட்டி எழுந்ததையொப்ப, இருட்கூட்டஞ் சுருண்டு மடங்கி அலைகடலிற் சென்று அடங்கிவிடுமாறு இளைய ஞாயிறு உருக்கித் திரட்டிய பசும்பொற்றிரளே போலத் தளதள வெனக் கீழ்த்திசையில் தோன்றவும், அத்திசையின் பரப் பெல்லாம் பொன் உரைத்த கற்போற் பொலிந்து திகழ வும், பசுமை பொன்மை நீலம் சிவப்பு வெண்மை முதலான நிறவேறுபாடுள்ள பொன் வெள்ளிகள் உருகி ஒடுகின்ற நிலம்போல வான் இடமெல்லாம் பலவண்ண மாய் விரிந்து விளங்கவும், கரிய முகில்களெல்லாஞ் செவ் வரக்கு வழித்த அகன்ற திரைச் சீஃலகள் போலவும், வெளிய முகில்களெல்லாம் பொற்பட்டுத் துகில் போல வும் ஆங்காங்குச் சொல்லுதற்கரிய பேரொளியோடு திகழவும், உலகமங்கை நகைத்தாற்போலப் புதுமை யுற்றுத் தோன்றும் விடியற்கால அழகெல்லாம் பாட் டென்றே அறிதல் வேண்டும். ஆ இங்கனந் தோன்றும் அவ்விடியற்கால அழகினைக் கண்டு வியந்த வண்ணமாய் மீன் வலேயொடு கடற்கரையில் நிற்குஞ் செம்படவனைக் காட்டிலுஞ் சிறந்த டிலவன் யார்?