பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

覓部競 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

அந்தணராயினும் மறைமலையடிகளைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுக்கொண்ட மற்ருெரு பெரியார் வி, கோ. சூரியநாராயண் சாஸ்திரியார் என்ற தமது பெயரையே தனித்தமிழ்ப் பெயராக ம7 ற்றி அமைத்துக் கொண்ட பரிதிமாற்கலைஞர். தமிழ்த் தாயின் அருந்தவப் புதல்வராகிய அச்செம்மல் யாத்துள்ள தமிழ் வியாசங் கள். தமிழ்புலவர் சரித்திரம் ஆகிய நூல்கள் கட்டுரைக் கலேவளர்ச்சியை ஆராயும் கண்னேட்டத்தோடு இன்றும் படித்து இன்புறத்தக்கன.

மறைமலை அடிகளைத் தொடர்ந்து இதழ்கள் வாயி லாகவும் நூல்கள் வாயிலாகவும் கட்டுரைக்கலையை வளர்த்த தமிழ்ச் சான்ருேர் திரு. வி, க. அவர்கள். தேச பக்தன், நவ சக்தி போன்ற இதழ்கள் வாயிலாக ஆம், முருகன் அல்லது அழகு, பெண்ணின் தெருகை'. "இக்தியாவும் விடுதலையும்', 'பைங்தமிழ்ச்சோலை', 'பரம்பொருள் அல்லது வாழும் வகை முதலான நூல்கள் வாயிலாகவும், தமிழ்ப் பெரியார் திரு வி. க. அவர்கள் வளர்த்த கட் டுரைக்கலை நாட்டு மக்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது; வீட்டு மக்கள் எல்லாம் நாட்டு மக்களாய் வீறு கொண்டு எழச்செய்தது. இலக்கியம், அரசியல், பொருளாதாரம், சமயம், சீர்திருத்தம் முதலாய துறை களில் எல்லாம் கட்டுரைக் கலை வாயிலாகத் தொண் டாற்றிய தண்டமிழ் மேதை திரு. வி. க. அவர்கள் தமிழ் நடை தனிச்சிறப்பு வாய்ந்ததாகத் திகழ்ந்தது. தமிழ் உரை நடை உலகில் திரு. வி. க. நடை தனிப் புகழ் பெற்றது. தமிழின் அழகையும் ஆற்றலையும் தம்கட்டுரை தடையால் உலகம் போற்றச் செய்த பெருமை திரு.வி.க. அவர்களின் தனியுரிமை. அவர்தம் அழியாப் படைப்பா கியபெண்ணின் பெருமையினின்று ஒருபகுதிவருமாறு:"

45. பெண்ணின் பெருமை (1945), பக். 105.