பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#65 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

கட்டுரைகட்கு அவரே முன்னேடி என்பதை அறிவர். மறைமலையடிகளாரின் திருமகளாராகிய திருவரங்கம் நீலாம்பிகை அம்மையார் அவர்கள் எழுதிய தனித் தமிழ்க் கட்டுரைகள் அடிகளாரின் தனித்தமிழ் இயக்கத்தின் தலைமைப் பரிசாகும். திருவாட்டி. ஈ. த. இராஜேஸ்வரி அம்மையாரின் இலக்கிய வளங்கொழிக்கும் விஞ்ஞானக் கட்டுரைகளோ அவ்வகையில் ஈடு இணையில்லாதவை. விஞ்ஞானத்துறையில் தமிழ் வளர இவ்வம்மையார் செய்த தொண்டு அழியாப் புகழ் வாய்ந்தது ஆகும்.

திரு. வ.ரா. அவர்கள் சிறப்பாக வாழ்க்கைச் சித்திரங் களை எழுதுவதில் தனிச்சிறப்புப் பெற்று விளங்கினர். திரு. டி.கே.சி. அவர்கள் இலக்கியச் சுவைக் கட்டுரைகளைத் தமக்கே உரிய பாவ", த்தோடும் பாணி'யோடும் எழுது வதில் நிகரற்று விளங்கினர். இவ்விருவரும் பழைய இலக்கணவிதிகள் பற்றிக் கவலைப்படாதவர்கள். பேசுவது போலவே எழுதவேண்டும் என்ற கொள்கை படைத்த வர்கள். எனினும், புதிய சிந்தனைக்கு முதலிடம் தந் தமையால், இவர்கள் கட்டுரைகள் இலக்கிய அரங்கில் அழியா இடம் பெற்றன.

திரு. கல்கி அவர்கள் பழைமைக்கும் புதுமைக்கும் பாலமிட்டவர்கள்; தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர் களிடம் தாம் பெற்ற பயிற்சியை மறவாது, பக்தியோடு தமிழ் வளர்த்த தகைமையாளர். அருவியின் வேகத் தோடு அறிவார்ந்த நகைச்சுவையையும் தம் கட்டுரை களில் களிநடம் செய்ய வைத்த கல்கி ஆசிரியன் எழுது கோல், தமிழர் எண்ணத்தில் தக்க இடம் பெற்று விட்டது.

47. இவ்வுண்மை பற்றிய வரலாற்று விளக்கத்திற்குப் பார்க்க: மறைமலையடிகள் வரலாறு-மறை. திருநாவுக்கரசு (1939)-பக். 29, 289-325.