பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் சேதுப்பிள்ளையவர்கள்....... 輩9教。

சிறந்த பண்புகளாலும், பேராசிரியர், அவர்கள் உரை நடையை ஊன்றிப் பயில்வார்,இலக்கிய உணர்வும் தமிழ்ப் புலமையும் எளிதில் பெறுவர். அடுத்துக் குறிப்பிடத் தக்கது ஊர்ப்பெயர்களின் உண்மை வடிவு வரலாறு குறித்து, அவர்கள் வாய்ப்பு நேரும்போதெல்லாம் வரை யாது குறிப்பிடும் பான்மை ஆகும். சான்ருக அலையும் கலையும் என்னும் நூலில் உள்ள சென்னைக் கடற்கரை", கொச்சைத் தமிழ் ஆகிய கட்டுரைகளில் ஊர்ப் பெயர் கள் பற்றி வரும் பகுதிகளைக் குறிப்பிடலாம்.

பேராசிரியர் அவர்கள் கட்டுரைத் தமிழுக்கு ஒளியும் உரமும் ஊட்டும் உயர் பண்புகள் எளிமையும் இனிமை யும் தெளிவும் திண்மையுமாகும். இவற்ருேடு சேர்த்துக் குறிப்பிடத்தக்க மற்ருென்று, பேராசிரியர் அவர்களின் தனித்தமிழ்த் நடை அரசியல் அரங்கில் தனித்தமிழ் இயக்கத்தை வீறுகொண்டு போற்றுவோரும், எதுகை இன்பத்திற்காக வடமொழிச் சொற்களை வரம்பின்றிக் கையாண்டுவிடுவர். ஆளுல் பேராசிரியரவர்கள் செந்தமிழ் நடையில் வடமொழிச் சொற்கள் நூற்றுக்கு ஒன்று விழுக்காடாகக்கூட நுழைவதில்லை. அவர்கள் தனித் தமிழ் ஆர்வம் ஆரவாரமற்றது; திட்ட நுட்பஞ் சான்றது. சான்று ஒன்று காண்போம்:

  • திரை கடலோடியும் திரவியம் தேடு, என்பது பழ மொழி. கால்டுவெல் ஐயர் சரிதத்தில் இப்பழமொழி பின் கருத்தைப் பேராசிரியர் அவர்கள், திரை கட லோடியும் திருவினைத் தேடிய யவனரும் என்னும் சொற் களால் குறிப்பிடக் காணலாம்."

பேராசிரியர் அவர்கள், தல்ல தமிழ்ச் சொற்கள் இருக்கும்போது வேற்றுமொழிச் சொற்களை அறி

54. கால்டுவெல் ஐயர் சரிதம் (1936), டக் 45,